523
 

(ப. இ.) பொருந்திய மரப்பட்டையின்கண் வரைந்த எண்பத் தோரறையிலும் அம்மையின் மந்திர எழுத்தாகிய 'நமசிவய' என்பதனை மாறிமாறி வரைந்தபின், ஓமம் நெய் முதலியவற்றால் வளர்த்துப், பொங்கலும் படைத்து நின்ற ஆகுதியும் செய்க. பெண்: ஆகுபெயராக அம்மையின் எழுத்தைக் குறிக்கும். ஆயந்தலத்: ஆந்தலத்து - தக்கதாய் அமைந்த தூய இடத்து. உயிராகுதி : அவிக்கு உயிர்போன்ற நெற் பொரியாகுதி.1 பூரணவாகுதி: நிறையாகுதி.

(அ. சி.) மரவுரி - மரப்பட்டை. இப் பெண் - இந்த எழுத்துக்கள். அம்மை எழுத்தென்று மேற்பாட்டிற் கூறியபடி ஈண்டுப் பெண் என்றே கூறினார் எண்பத்தொன்றின் - 81 அறைகளிலும். காய்ந்தவி - சமைத்த சோறு. ஆய்ந் தலத்து - செய்யத்தகும் இடத்தில். உயிராகுதி - பிராண ஆகுதி - பூரண ஆகுதி.

(48)

1342. பண்ணிய பொன்னைப் பரப்பற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற் சேர்க்கலு மாமே.

(ப. இ.) சக்கரவடிவாகச் செய்யப்பட்ட திருவருளம்மையின் திருவுருவை உள்ளப் பதைப்பு ஒடுங்க நீ முறையாக வழிபட்டு உறுதியாகக் கைக்கொள்வாயாக. உருவேற்றுதற்கென வரையறுக்கப்பட்ட நாட்களில் இன்பமும் எய்தும். மந்திரவுருவாலும் அம்மை வழிபாட்டாலும் திருவடியுணர்வு கைவந்தவர் நான்முகனை ஒத்தவராவர். நான்முகனை ஒத்தலாவது உறுதிப்பொருள் நான்கினையும் உள்ளவாறுணர்ந்து கைக் கொண்டொழுகி உணர்த்தவல்லாராய் எங்கணும் புகழ் பூசனைபெற்று விளங்குதல். திருவருள் மிக விரைவாக அவ்வுயிரைச் சிவபெருமான் திருவடிக்கீழ்ச் சேர்க்கும். நல்நேயம் - சிவபெருமான்.

(அ. சி.) பண்ணிய பொன்னை - இயந்திர வடிவமாகச் செய்த பொன்னிறத்தளான நவாக்கரிசத்தியை. பரப்பு அற - பரபரப்பு அற - நிதானமாக. நண்...மாமே - ஆத்ம சத்திகளின் அருள் பெறலாகும்.

(49)

1343. ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ்
சேர்கின்ற ஒன்பதுஞ் சேரநீ வைத்திடே.

(ப. இ.) பேரறிவுப் பேராற்றலின் வகை ஒன்பது என்பர். இவற்றையே நவசத்தி என்பர். இவ் ஒன்பது ஆற்றலையும் ஒருபுடையொப்பாகக் கூறப்படும் ஒன்பது பொருள்களைத் தொகையாகச் சேர்த்து வைக்கப்படும் முறைமை ஓதப்படுகின்றது. அவை வருமாறு: நன்மையாகின்ற சந்தனம், குங்குமம், கத்தூரி, எங்கணும் நறுமணம் பரவும் சாந்து, சவாது, புனுகு, நெய், பச்சைக்கருப்பூரம், கோரோசனை கலந்த தூநீர் என்பன.

(அ. சி.) போகின்ற - வாசனை வீசுகின்ற. ஆகோசனம் - பசுவினின்றும் எடுக்கப்படும் கோரோசனை. ஒன்பது - சந்தனம் (1) குங்குமம்


1. அகனமர்ந்த. சம்பந்தர், 1. 132. 6.