527
 

1353. பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்துஞ் சிரீம்தன மாமே.1

(ப. இ.) சக்கரத்தினுள்ளே பரந்த இடங்களினுள்ளே ஆற்றல்கள் அறுபதும் காணப்படும். ஆற்றல்கள் - சத்திகள். திருவருட் கன்னிகள் எண்மரும் சூழ மறைந்திருப்பர். விரிந்த இருகைகளிலும் தாமரையும் குமுதமும் தாங்குவள். சிறந்த தொண்டர்கள் ஓதும் 'சிரீம்' என்னும் வித்தெழுத்துத் திருவடிச் செல்வத்தை நல்கும.் சத்திகள் - யோகினிகள். கன்னிகள் - வசினியாதி எண்மர்.

(அ. சி.) சிரீம் தனம் - செல்வத்தைக் கொடுக்கும் பீச மந்திரம்.

(60)

1354. தனமது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்
தினகர னாரிட செய்திய தாமே.

(ப. இ.) திருவருட் செல்வமாகிய அம்மையை மறவா மனத்தான் திருவைந்தெழுத்தோதி நோக்கினால் மன அடக்கம் எளிதாக வந்து வாய்க்கும். அடங்கிய மனத்துடன் ஓராண்டு பயின்றால் ஆசைப்பளுவாகிய பற்று நீங்கித் திருவருளால் எண்ணியவெல்லாம் கைகூடும். சிவச் சுடராம் தினகரனார் திருவடிப்பேறே அவர் விழையும் செய்தியாகும். தினகரனார்: பகலவனார்; பகல் - தினம். கரன் - செய்பவன்.

(அ. சி.) ஓடி மரிக்கில் - அடங்கினால். கனமிவையற்று - ஆசை ஒழிந்து. தினகரன் - சூரியன்.

(61)

1355. ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

(ப. இ.) மூலத்திடத்துத் தோன்றும் பெரிய தாமரைமலர், திருவருளாற்றலாகிய அம்மை வீற்றிருந்தருள வாய்ந்த நறுமலர். அம்மலரின்கண் ஆருயிர்புரியும் அன்பிற்குத் தக்கவாறு திருவருள் பெருகும். பெருகியபின் செந்தழல் மண்டலமாம் சிவத்தின் திருவடியைச் சேர்ப்பிக்கும்.

(62)

1356. ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத் தறுவகை சூழவே.


1. உண்ணாமுலை. சம்பந்தர், 1. 10 - 1.

" போதையார். " 3. 26 - 2..