603
 

1544. ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.1

(ப. இ.) சிவபெருமானின் திருமுகம் ஐந்துள. அவை இயக்கம் ஆட்சி. நடுக்கம் தோன்றுவித்தல் என்னும் தொழில் பற்றிய பெயர்களுடையன. இவற்றை ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம் எனவும் கூறுப. இத் திருமுகங்களின் இடம் முறையே உச்சி கிழக்கு தெற்கு வடக்கு மேற்கு எனத் திசைநோக்குவன. இத் திருமுகங்கள் ஐந்துடன் ஆருயிர்களை உடல் உலகுடன் பொருத்துவதும், மாயையைக் காரியப்படுத்துவதும், வினைமலங்களைத் தொழிற்படுத்துவதும் ஆகிய நடப்பாற்றலாகிய ஆதிசத்தி கீழ்நோக்கிய திருமுகம் என்று கூறப்படும். இதனுடன் சேர்த்து ஆறு திருமுகங்கள் உள. இவை சிவபெருமானுக்குரியன. இத்துடன் அயன் அரி முதலிய தேவர்கள் தலை மாலையும் பூண்டுள்ளார். மக்களாகிய நாம் அச் சிவபெருமானுக்கு அன்புடையராவோம். நரரியல்பு : நாரரியல்பு; நாரம் - அன்பு.

(அ. சி.) ஆருயிர்...ஆறுள-ஆர் உயிர்களும் மாயை (Matter) யின் அணுக்களும் தங்கும்படியான அதோ முகத்தையும் கூட்டச் சதாசிவத்தின் முகங்கள் ஆறாகும்.

(13)

1545. ஆதிப் பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே.

(ப. இ.) அம்மையோடு கூடிய அப்பனாகிய சிவபெருமான் உலகை அளந்த மாலாகவும், அம் மால் நிறம்போலும் ஒலியுடைய கடலாகவும் அக் கடல் சூழ் உலகில் வாழும் பல்வேறு உயிர்களாகவும், கலப்பால் ஒன்றாய் நிற்பன். அவன் வனப்பாற்றலாகிய திருவருளம்மையுடன் பிரிப்பின்றி மரமுங் காழ்ப்பும்போல ஒருவனே இருநிலைமையுமாய் நிற்பன். அவ் வம்மையே நடப்பாற்றலாகிய ஆதியும் ஆவள். அவளே ஒடுக்கத்தைச் செய்யும் ஆண்டவனுமாவள். ஆதி - நடப்பாற்றல்.

(அ. சி.) பேதிப்பிலாமையில் - பிரிவு இல்லாமல். ஆதிக்கண் - சிருட்டி ஆரம்பத்திலும், அந்தமும் - ஒடுங்கும் காலத்திலும்.

(14)

1546. ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே.2


1. தலையே. அப்பர், 4. 9 - 1.

2. நானேயோ. 8. திருவேசறவு - 10.

" தேடிக். அப்பர், 4. 9 - 12.