கொண்டு பொருளுணர்ந்து வழிபட்டால் வழிபடுவார் உள்ளம் அதன்கண் தங்கும். அதனால் இன்பக்கண்ணீர் பெருகும். அம்முறையில் அத் தமிழ் நூல்களின்வழி வழிபாடு செய்து கண்ணீரையும் கண்டேன். அதுவே நற்றவம் எனவும் கொண்டேன். எண்ணுதிரு ஐந்தெழுத்தே யாவுக்கும் மந்திரமாம், பண்ணுசெயல் தந்திரமாம் பாட்டு மந்திரம் - மறை. தந்திரம் - முறை. மேலும் வரும் வெண்பாவாலும் அது வலியுறும்: "வேண்டுமருந் துண்டார்பால் மெய்நோய்கள் நீங்குமால் நீண்டகண் கேள்வியால் நீங்காவாம் - பூண்டமொழிச் சொற்பொருள்கள் ஓர்ந்தார்பால் தோயுமால் தோயாவாம் பற்பலர்பால் அன்பின்பப் பண்பு." (அ. சி.) இலைதொட்டு - பத்திரங்கிள்ளி (சிவபூசைக்குரிய செயல்). வரும் புனல் கண்டேன் - கண்களில் ஆனந்த நீர் வரக்கண்டேன். தலை தொட்ட நூல் - ஞான நூல். தாழ்ந்தது - அடங்கிற்று. தலைதொட்டு - அதுமுதல். (8) 1614. படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்கு இடரடை யாவண்ணம் ஈசன் அருளும் இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில் உடரடை செய்வ தொருமனத் தாமே. (ப. இ.) படர்ந்த சடையினையுடையராய் முழுமுதற் சிவனையே வேண்டிப் புரியும் அழிவில்லாத பெருந்தவம் இன்பமெனக் கொண்டு இடையறாது செய்த உண்மைப் பத்தர்கட்குப் பிறப்பு முதலிய துன்பங்கள் ஏதும் அணுகாவண்ணம் சிவபெருமான் காத்து அருளிச் செய்வன். இன்னாமை இன்பம் எனக்கொண்டு ஒழுகுவார் தவமும் மெய்த்தவமாகும். அத் தவத்தினை நோக்கில் உடம்பு அடையாமல் தடுப்பதற்கு வழி ஒருமனப்பட்டுச் சிவனை இடையறாது நினைவதேயாம். (அ. சி.) பத்திய பத்தர் - அருளுடைமை முதலிய பதின்மூன்று (1589) துறவு அறங்களைக் கைக்கொண்ட தவத்தர். இடர் அடை செய்தவர் - துன்பத்தை இன்பமாகக் கருதுபவர். உடர் அடை செய்வது - உடர் - உடல்; (ரகரம் போலி) பிறவியைத் தடுப்பது. ஒருமனம் - ஒருமைப்பட்ட மனம். (9) 1615. ஆற்றிற் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும் நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.1 (ப. இ.) திருமறை, திருமுறைகளாகிய செந்தமிழ் அருள் நூல்களை - வேதாகமங்களை அருட்கண்கொண்டு கற்றுணராதார் நோன்பிருந்து தவம் செய்யமாட்டார். தவத்திற்கு அஞ்சிப் பிறப்பு இறப்பின் பெருந் துன்பத்திற்கு அஞ்சாது பிறந்து சோற்றுக்கு நின்று அலைகின்றவர்களுடைய நிலை, ஆற்றிற் கிடக்கின்ற முதலைத் துன்பத்திற்கு அஞ்சிக்
1. ஆற்றோடு. பட்டினத்துப்பிள் ளையார், திருத்தில்லை - 19.
|