660
 

மேல்பட்ட இடம் (விமலனுடைய இடம்). "ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று, மீதானத்தே செல்க உந்தீபற் - விமலற்கிடமதென்று உந்தீபற."

(2)

1678. மேலென்றுங் கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்றும் நானென்றுந் தன்மைகள் ஓராறும்
பாரெங்கு மாகிப் பரந்த பராபரங்
காரொன்று கற்பக மாகிநின் றானே,1

(ப. இ.) மேல் கீழ் என்னும் பாகுபாடுகள் நீங்கி ஆராயுமிடத்துத் தான், யான், நி என்னும் மூவிடப்பெயர்களும்; அவன், அவள், அது என்னும் திணை பாற் பெயர்களும் கூடிப் பெயர்த்தன்மை ஆறாகும். நிலவுலகமெங்கணும் பரந்து நிறைந்த முழுமுதற் றனிப்பொருளாம் சிவன் வேண்டாமைக் கொடுத்தலிற் காரும் வேண்டாக்கொடுத்தலிற் கற்பகமும் ஆகி நின்றருள்கின்றனன்.

(அ. சி.) ஓராறு - தான், நான், நீ, அவன், அவள், அது ஆக ஆறு தன்மைகள். காரொன்று கற்பகமாக - மேகத்தையும் கற்பக மரத்தையும் ஒப்பாக.

(3)

1679. மேதாதி யாலே விடாதோ மெனத்தூண்டி
ஆதார சோதனை அத்துவ2 சோதனை
தாதார மாகவே தானெழச் சாதித்தால்
ஆதாரஞ் செய்போக மாவது காயமே.

(ப. இ.) பதினாறு கலைப் பிராசாதத்தாலே இடையறாது ஓமெனத் தூண்டி ஆறு நிலைக்களங்களையும் ஆறு வழிகளையும் சிவகுருவின்திருவருட்டுணையால் செவ்வையுறத் திருத்தினால் உடம்பின்கண் வழிபடற்கு இயைபு உண்டாகும். மூலாதார முதல் வழிபாடியற்றினால் அங்ஙனம் வழிபாடுவார்க்கு வரும் நுகர்வு சிவநுகர்வேயாம். பிராசாதம் - ஒருவகை மந்திரம்.

(அ. சி.) மோதாதியாலே - பதினாறு காலைப் பிராசாதத்தாலே. ஆதார சோதனை - ஆறு ஆதார சோதனை. அத்துவா சோதனை - ஆறு அத்துவாக்கள் சோதனை (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை). தாது ஆரமாக - மூலாதாரம் முதலாகக் கொண்டு. செய்போகம் - சிவபோகம்.

(4)

1680. ஆறந்த முங்கூடி யாகும் உடம்பினிற்
கூறிய வாதார மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக
ஊறிய வாதாரத் தோரெழுத் தாமே.

(ப. இ.) சொல்லும் பொருளுமாகிய வழிகள் ஓராறு. அவை முறையே எழுத்து மொழி மறை எனவும், உலகு கலன் (தத்துவம்) கலை


1. காரணி. 8. திருக்கோவையார், 400.

(பாடம்) 2. அத்துவா.