661
 

எனவும் கூறுப. இவற்றான் இயங்குவது உடம்பு. இதன்கண் மூலமுதல் ஆறு நிலைக்களங்களிலும் வழிபடும் முறைமைகளைக் குறிக்கொண்டு போற்றுமின். அமைந்துள்ள எழுத்துக்கள் ஐம்பதின்மேல் அமுதூறும் மூலாதாரத்து எழுத்து ஒன்று உண்டு. அஃது ஓமொழி என்ப.

(அ. சி.) ஆறந்தம் - அத்துவாக்கள் ஆறு. ஆறிய - அமைந்துள்ள. ஊறிய - அமுதம் ஊறுதற்குரிய. ஓர் எழுத்து - பிரணவம்.

(5)

1681. ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

(ப. இ.) தோற்றும் பருவுடம்பு அழிகின்ற வுடலாகும். தோன்றா நுண்ணுடல் இதன்கண்ணின்று உயிருடன் ஏகும் உடம்பாகும். இவற்றுக்குரிய எழுத்துக்கள் ஐம்பதாகும். தத்துவமாகிய உடம்புக்கு வழிகள் ஆறும் உறுப்புகளாகும். வழிகள் - அத்துவாக்கள்.

(அ. சி.) ஆகும் உடம்பு - தூல சரீரம். போகும் உடம்பு - சூக்கும சரீரம் ஆறந்தம் - அத்துவாக்கள் ஆறு.

(6)

1682. ஆயு மலரின் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

(ப. இ.) மூலாதாரங்களின் வைத்து ஆராயுமலர்களின் மேலானது அழகிய பதினாறு இதழ்களுடைய மிடற்றின்கண் மலராகும். ஆங்கு வழிபடும் தூய அறிவு சிவப்பேரின்பமமாய்த் திகழும். அவ் வறிவு சிவ அறிவினுள் அடங்கிச் சிவ அறிவாய் விளங்கும்.

(அ. சி.) ஆயுமலர் - ஆராய்தற்குரிய ஆதார மலர்கள். இதழ் பதினாறு - விசுத்தி. அறிவு - ஆன்மா. மேய அறிவு - போருந்திய சிவம்.

(7)


2. அண்டலிங்கம்
(உலக சிவம்)

1683. இலிங்கம தாவ தியாரும் அறியார்
இலிங்கம தாவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாவ தெண்ணெண் கலையும்1
இலிங்கம தாக எடுத்த துலகே.

(ப. இ.) அம்மையப்பரின் அடையாளமாகிய சிவலிங்கமே எல்லாத் திசைகளும், எல்லாக் கலைகளும், எல்லாவுலகுமாம். இவ் வுண்மையினை


1, தளங்கிளரும். அப்பர், 6. 73 - 9.