மான பகுதி உகாரமாகும். சிவலிங்கத்தின் மேற்பகுதி மூவகைப்படும். அவை முறையே கீழிருந்து அகரம், விந்து, நாதம் என்பன. (அ. சி.) இலிங்க உருவத்தின் அடிப்பீடம் பிரணவ உருவம் என்றும், இலிங்கத்தின் கண்டம், அஃதாவது அதோமுகம் பிரணவ எழுத்துக்களில் மகாரத்தைக் குறிக்கும் என்றும், இலிங்கத்தின் நடு வட்டம், அஃதாவது உள் வட்டம் (ஒடுங்கியுள்ள வட்டம்) உகாரத்தைக் குறிக்கும் என்றும், மேல் இலிங்க பாகம் அகாரத்தைக் குறிக்கும் என்றும் இம் மந்திரம் கூறுகின்றது. (23)
5. ஆத்தும லிங்கம் (உயிர்ச்சிவம்) 1723. அகார முதலா யனைத்துமாய் நிற்கும் உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும் அகார வுகாரம் இரண்டு மறியில் அகார வுகாரம் இலிங்கம தாமே.1 (ப. இ.) உலகுடல் உயிர்கட்குத் தாங்கும்நிலைக்களனாக நிற்பவன் சிவன். அவ் அடையாளம் அகரத்தால் குறிக்கப்பெறும். அதனால் அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் என்றருளினர். அவை இயங்குமாறு இயைந்தியக்கும் திருவருளாற்றல் சிவை. அவ் வியக்கத்தை உயிர்ப்பு என அருளினர். இவ் வடையாளம் உகரமாகும். அகர உகரமாகிய இவ்விரண்டுமே 'சத்தியும் சிவமுமாய தன்மையில் வுலகமெல்லாம்' என்னும் செம்பொருட்டுணிவின் மெய்ம்மையாகும். இவற்றை உணரின் அகரவுகரமே சிவலிங்கம் என்க. (அ. சி.) அகரம், சிவன்; உகரம், சத்தி; சிவத்துடன் சத்தி சேர்ந்தவிடத்துப் பொருள்கள் உயிர்ப்பெய்தும் என்றும் இம் மந்திரம் கூறுகின்றது. (1) 1724. ஆதார மாதேய மாகின்ற விந்துவு மேதாதி நாதமு மீதே விரிந்தன ஆதார விந்து அதிபீட நாதமே போதாவி லிங்கப் புணர்ச்சிய தாமே. (ப. இ.) தூமாயையின்கண் தோன்றும் விந்து தாங்குவதாகிய ஆதாரமாகும். அதனால் தாங்கப்படுவதாகிய நாதம் ஆதேயமாகும். இவ்விரண்டும் திருவருளால் உலகமாய் விரிந்தன. ஆதாரவிந்து சிறந்த பீடமாகும். நாதமே சிவலிங்கமாகும். இவ் விரண்டன் புணர்ச்சியே மனமணி யிலிங்கமாகிய ஆருயிர் இலிங்கமாகும். இதனை ஆத்துமலிங்கம் என்ப. சிவபெருமான் இரண்டுமாய் நிற்பன். அது வருமாறு: ஆனேற்றால் தாங்கப்படுவோன் பிறையினால், தான் தாங்குவோன் சிவன்தான். (அ. சி.) ஆதேயம் - ஆதாரத்தில் நிலைத்துள்ளது. (2)
1. எட்டும். உண்மை விளக்கம், 31.
|