682
 

(ப. இ.) மேல் ஓதிய ஒன்பான் திருப்படிமங்களுள் நடுவாகக் காணப்படும் சதாசிவக் கடவுள், தேவர்கள் அனைவர்களுக்கும் அவர் வணங்கப்படும் முழுமுதல்வனாவர். எண்புலமாகிய எட்டுத்திசைகளிலும் காணப்படும் காவற்றெய்வங்கள் கைகூப்பி வணங்கும் முழுமுதல்வனும் அவனே. அயன், அரி, அரன், ஆண்டான் ஆகிய நால்வரும் அடிதொழும் சிறப்பு வாய்ந்த முழுமுதல்வனும் அவனே. எல்லாரும் முழுமுதலென்றே தொழுவர். அம் முறையான் யாவர்களும் அச் சிவபெருமானின் திருவடியை அடைவர்.

(அ. சி.) தேவர்.....நந்தியை - முப்பகுதியில் நடுவில் உள்ள அருவுருவாகிய சதாசிவம், தேவர்களுக்குப் பிரான், எட்டுத் திக்கு இறைவர்களுக்கு நாதன்; அயன், அரி, அரன், ஈசன் என்னும் நால்வருக்கும் பிரான் ஆவான் அவனை. ஏவர் பிரான் - எல்லாருக்கும் பெருமான்.

(3)

1736. வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடுங் கன்னி யுணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.

(ப. இ.) இருள்சேர் இருவினையும் நீங்கி அறச் சதாசிவக் கடவுளாகிய அருளோன் திருவடியை வேண்டி நின்று தொழுதேன். ஆண்டு, திங்கள், நாள் எனக் குறியிட்டு அளக்கப்படும் காலவரையறை ஞாயிறு திங்கள் விண்மீன்களைக்கொண்டு நிகழ்கின்றது. ஞாயிறும் திங்களும் சதாசிவக் கடவுளின் இருபெரும் திருக்கண்களாகும். அதனால் அச் சதாசிவக் கடவுளே அளக்கின்றார் என்ப. அக் கடவுளோடும் பிரிப்பின்றி நிற்கும் திருவருளாற்றல் மனோன்மணி எனப்படும். இவ் வன்னை அத்தன் என்னும் திருவுருவங்களில் எதனை வழிபட்டாலும் இருவரும் வேறுருவில் ஓருடம்பாய்த் திகழ்கின்றமையால் எல்லாம் சதாசிவ வழிபாடேயாகும்.

(அ. சி.) ஆண்.....கின்ற - சதாசிவத்துக்கு ஞாயிறும், திங்களும் இரு கண்கள் ஆதலால் நாள், மாதம், ஆண்டு இவைகளைச் செய்கின்ற இறைவன் என்னப்பட்டது. கன்னி - மனோன்மணி. மூண்ட - மூடிய, பொருந்திய.

(4)

1737. ஆதி பரந்தெய்வம் அண்டத்து நற்றெய்வஞ்
சோதி யடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள்1 மாதெய்வ நின்மலன் எம்மிறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

(ப. இ.) ஆதியாகிய அம்மையோடு கூடிய பெருந்தெய்வம். எல்லா அண்டங்களுக்கும் நன்மையருளும் சிவத்தெய்வம். திருவடியுணர்வு கைவரப்பெற்ற சோதியடியார் அருள்துணையால் ஆராக்காதலுடன் இடையறாது தொடரும் 'நமசிவயப்' பெருந்தெய்வம். நீதியுள் நிறைந்த நீள்பெருந்தெய்வம். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய நேசநிறை தெய்வம். அத் தெய்வ வடிவங்களாகத் தோன்றும் ஒருமுதற் சிவ பெருமானே எம் தலைவனாவன். அவன்றன் உடம்பில் ஓர்பாதி


1. சோதியே. 8. அருட்பத்து, 1.