1772. பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவாகி வந்தென் உளம்புகுந் 1தானே. (ப. இ.) ஆருயிர்கள் இனிப் பிறந்துழலாவண்ணம் பிறவாப் பேரருளும் செந்நெறியினைத் தந்தருளியவன், பிறப்பு இறப்பில்லாத பேரருளாளனாகிய சிவபெருமான். தன் திருவடியை மறவா நினைவுடன் இருக்கும்படி அருள்புரிந்தவனும் அவனே. பெருந்தவக்கோலத்தோனாகிய நந்தி மாதவன் என்பதற்கு மாதை ஒரு கூற்றிலேயுடைய சிவபெருமான் என்றலும் ஒன்று. அவனே அறவாழி அந்தணன் - அனைத்திற்கும் காரணமாம் பெரும்பொருளும் அவனே. உயிர்க்குயிராய் ஆண்டான் அடிமை உறவாய் என் நெஞ்சம் புகுந்தருளினன். (அ. சி.) பிறவாநெறி - முத்தி. மறவா அருள் - மறதியில்லாத ஞானம். (12) 1773. அகம்புகுந் தானடி யேற்கரு ளாலே அகம்புகுந் துந்தெரி யானரு ளில்லோர்க்கு அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய் அகம்புகுந் தானந்தி யானந்தி 2யாமே. (ப. இ.) சிவபெருமான் திருவருளால் அடியேன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அங்குப் புகுந்தனன். திருவருள் கைவரப்பெறாதானுக்கு அகம் புகுந்தும் அவரால் உணர்தற்கு அரியன். உள்ளம் புகுந்து கண், எண்ணம், அறிவமைதி எல்லாம் சிவத்தொடர்பாக ஆக்குதலால் எல்லாம் சிவ இன்பமாகவே திகழும். சிவமாக்கி ஆருயிர்களை ஆளுமுறையால் ஆனந்தி என்னும் பெயர் சிவனுக்காயிற்று. ஆனந்தி : ஆன் - உயிர். நந்தி - சிவன். (அ. சி.) சிவமாய் அகம்புகுந்தானந்தி - சிவகரணமாய் ஆனந்திப்பவன். ஆன் நந்தியாமே-பசுபதியாகிய சிவசாரூபத்தையடைவான். (13) 1774. ஆயும் அறிவோ டறியாத மாமாயை ஆய கரணம் படைக்கும்ஐம் பூதமும் ஆய பலவிந் திரிய மவற்றுடன் ஆய வருளைந்து மாமருட் செய்கையே. (ப. இ.) ஆருயிர் கண் முதலிய பொறிகளைத் துணையாகக் கொண்டு அறியும் அவ் வுயிருடன் கூடிய மாயை மாமாயை எல்லாம்
1. வேண்டுங்கால். திருக்குறள், 362. " அறவாழி. " 8. " இறவாத. 12 . காரைக்காலம்மையார், 60. 2. அருக்கனேர், சிவஞானபோதம், 11. 2 -1. " முத்திநெறி. 8. அச்சோப்பதிகம், 1.
|