764
 

களுள் அவற்றின் துய்யதன்மையை ஆராயின் சுழன்றுகொண்டடிருக்கும் வட்டத்தில் பதினாறு இதழ்த்தாமரை காணப்பெறும். அதன்கண் - நெஞ்சத்திடத்து செவ்விதாக ஞாயிறு தோன்றும்.

(அ. சி.) இது விசுத்தியில் சூரியன் உதிக்கும் முறை கூறியது.

(5)

1943. ஆதித்த னுள்ளி லானமுக் கோணத்திற்
சோதித் திலங்குநற் சூரிய னாலாங்
கேத முறுங்கேணி சூரிய னெட்டிற்
சோதிதன் னீரெட்டிற் சோடசந் தானே.

(ப. இ.) மேலோதியவாறு ஞாயிற்றுக்குரிய நிலைக்களனாகிய முக்கோணத்தில் யாவற்றையும் விளக்கித் திகழ்கின்றவன் பகலவன். பகலவன் என்றாலும் சூரியன் என்றாலும் ஒன்றே. அவனது நாலாங்கால் குற்றந்தரும் கேணிபோன்றாகும். பகலவனுக்குரிய எட்டிதழ்த்தாமரை, பதினாறிதழ்த்தாமரை என்ப. குற்றந்தருங் கேணி என்பது திங்களின் நாலாங்கால் இறங்குந்தன்மையான் நேருவது.

(அ. சி.) கேதமுறங் கேணி - குற்றத்தைச் செய்வதான கிணறு போலும் ஆதித்த மண்டலம். சோடசம் - பதினாறு.

(6)

1944. ஆதித்த னோடே அவனி 1யிருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகி லீர்நீரே.

(ப. இ.) ஞாயிறு ஒளிதராவிடின் உலகம் இருளால் மூடப்படும். எழுத்தோசை நான்கும் செயலுறாது பிதற்றிக் கழிந்தது. இயற்கைப் பேரொளியாகிய சிவத்துடன் வேறறநின்று விளங்கும் துடிபோலும் இடையினையுடைய திருவருள் அறிவுப்பேராற்றலாம் ஆதிஅம்மை செய்தருளும் மறைபொருளை உலகோர் உள்ளவாறு உணரமாட்டார். "நாயகன் கண்ணயப்பால் நாயகிபுதைப்ப" என்பது உலகினுக்கு எவ்வகையாலும் ஒளிதருபவன் சிவபெருமானேஎன்னும் உண்மையை உணர்த்தவே. அம்மை, அப்பனின் திருக்கண்ணினைப் புதைக்கவே உலகம் இருண்டுவிட்டது. அதனால் ஞாயிற்றினுக்கும் ஒளிதருபவன் சிவபெருமான் என்பது பெறப்பட்டதல்லவா! நயப்ப என்பது 'நயப்பால்' எனத் திரிந்து நின்றது. ஞாயிறு சிவபெருமானின் எண்பெரும் வடிவங்களுள் ஒன்று. இவ்வுண்மையினை நம் தமிழ்ச் சான்றோரே உலகினுக்கு உணர்த்தினர். அதனை 'முருகன்மால் முற்சிவனார் மூத்தபிள்ளை முப்போ, திருளொலிஓம் காட்சி வடிவாம் . 'என்பதனால் நினைவு கூர்க.

(அ. சி.) பேதித்த நால் - வேறுபட்டுத் தோன்றும் நால்வகைவாக்கு. துடியிடை - சத்தி.

(7)


1. நாயகன். சிவஞானசித்தியார், 1. 2 - 24:

" நலமலி. அப்பர், 4. 14 - 8.