766
 

ஞாயிறு திருமலையினைச் சுற்றி வருகிறதென்பர். உயர்ந்தோர் உச்சித்துளைவாயிலாக ஞாயிற்றைக் காணும் முறையிற் காண்பர். ஞாயிற்றைப் பகலவன் எனவும் பகலோன் எனவும் கூறுவர்.

(அ. சி.) கடைநூலவர் - கடைப்பட்ட நூற்களை உணர்ந்தவர். தீரன் - சிவபிரான். ஊரை - ஈசன் இருக்கும் புருவமத்தி, உச்சித்தாமரை.

(10)

பிண்டாதித்தன்

1948. நின்றும் இருந்துங் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி யோடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.1

(ப. இ.) ஆருயிர்கள் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும் அருவாகிய சிவன் அவர்கள் உள்ளத்தைவிட்டு அகலாது கருத்துள் நின்று அருளுவன். அதனால் மலங்கள் அடங்கும். ஞாயிற்றின் ஒளி நடுநாடி வழியாகச் சென்று பரவும். அவ்வொளி எல்லா ஒளிகளையும் வென்று மிக்கு விளங்கி விரியும். இவ் வொளியினை அகஞாயிறு என்ப. அகஞாயிறு: பிண்டாதித்தன். பிண்டம்- சிற்றுலகம்; உடல். அண்டம் - பேருலகம்; உலகம்.

(11)

1949. ஆதித்தன் ஓடி யடங்கும் இடங்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர்
பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே யடங்குகின் றாரே.

(ப. இ.) உயிர்ப்பு பிங்கலைவழியாக ஓடி நடுநாடியிற் புகும். புகும் போது உண்டாகும் அகவொளி ஞாயிறு எனப்படும். அவ்வொளியினை உணர்ந்து அந்நிலையிலே நிற்கவல்லார் தம்மை உணர்ந்தோராவர். அஃதாவது காலக்கணக்கை வேண்டியவாறு கூட்டிக்கொள்ளும் ஆற்றலைத் திருவருளால் உடையராதல். அவ் வழி முயலாதாரனைவரும் வீண் பிதற்றல்களைப் பிதற்றித் திரிவர். அவர்கள் புறத்துக்காணும் ஞாயிற்றின் அளவையாகிய காலக்கணக்கால் வாழ்நாள் முடிந்து மாண்டு அடங்குவர். எனவே யோகியர் வாழ்நாள் அகஞாயிற்றைக் கொண்டு அளக்கப்படும் என்பது காண்க.

(12)

1950. உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
சொருகிக் கிடக்குந் துறையறி வாரில்லை
சொருகிக் கிடக்குந் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்குமென் னுள்ளன்பு 3தானே.


1. நின்றாலும். 12. பத்தராயப் பணிவார், 7.

" நெக்குநெக்குள். 8. புணர்ச்சிப்பத்து. 8.

2. தம்மை. சிவஞானபோத அவையடக்கம்.

3. உள்குவார். அப்பர், 4. 75 - 6.