(ப. இ.) அகத்தவமுயற்சியால் உயிர்ப்பினை நடுநாடிவழியாகச் செலுத்தி அகவொளியும் கண்டவர், அக் காட்சியாற் பல அண்டங்களும் ஒன்றோடொன்று நெருங்கிச் சுழன்றுகொண்டு நிற்கும் உண்மை நிலையினை உணர்வர். அங்ஙனம் உணர்வார்க்கு உள்ளன்பு நெகிழ்ந்து 'அயரா அன்பின் அரன்கழல் செலும்' என்னும் முறையாய்ச் சென்று இன்புறும் மெய்யன்புநிலை எளிதாக இனிதாக எய்தும். இந்நிலையினையே உள்ளன்பு நிலையென உரைக்கப்படும். (அ. சி.) உருவி - மூலாதாரத்தினின்றும் சுழுமுனையில் ஊடுருவி (13) மனவாதித்தன் 1951. எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப விரிகதி ருள்ளே வியங்குமென் ஆவி ஒருகதி ராகில் உவாவது வாமே. (ப. இ.) வெப்பக் கதிரினை வீசும் ஞாயிறும் தட்பக் கதிரினை வீசும் திங்களும் மேல் கீழாய் நேரொக்கத் தோன்றுங் காலம் உவாவெனப்படும். உவா-முழுநிலா: நிறைமதி: பூரணை. அங்ஙனம் விரிந்து எறிக்கும் கதிரினுள் ஆருயிர் இயங்காநிற்கும். (அ. சி.) உவா - பூரணை. (14) 1952. சாந்திரன் சூரியன் தான்வரிற் பூசனை முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை அந்த இரண்டும் உபய நிலத்திற் சிந்தை தெளிந்தார் சிவமாயி 1னார்களே. (ப. இ.) சந்திரகலை என்று சொல்லப்பெறும் இடகலையும் சூரியகலை யென்று சொல்லப்பெறும் வலப்பால் கலையும் முறையாக இயங்கிச் கொண்டிருப்பின் நற்றவமாம் சிவபூசைக்கு உற்ற அமைவாம் என்க. சூரியகலையின்கண் சந்திரகலை பொருந்தி நிகழுங்கால் பூசனைப் பொழுதாம் என்க. அக் கலை நடுநாடி வழியாகச் செல்லுங்கால் சிந்தைத் தெளிவுண்டாகும். இவரே 'சித்தம் சிவமாக்கப்' பெற்ற திருவினர். இவரே சிவமாய் அமர்ந்திருந்தார். (அ. சி.) பானுவில் இந்து வந்து ஏய்முறை - சந்திரகலை சூரிய கலையில் ஒடுங்கி நிற்கும் முறை. உபயநிலம் - சுழுமுனை. (15) 1953. ஆகுங் கலையோ டருக்கன் அனல்மதி ஆகுங் கலையிடை நான்கென லாமென்பார் ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற ஆகுமப் பூரணை யாமென் றறியுமே.
1. புத்தன். 8. திருத்தோணாக்கம், 6.
|