782
 

நல்வினைத் துய்ப்பினர் தேவராவர். மக்களில் தீவினைத் துய்ப்பினர் நரகராவர.் இந் நான்கு நிலையினையும் மா, மக்கள், இன்பி, துன்பி எனக் கூறலாம். இன்பியாகிய தேவர்நிலையினை அவாவித் தவம் புரிவாரும் உளர். அத்தகையோர் செய்யும் தவம் பிறப்பினைத் தருவதேயாகும். அது பசித்துண்டு பின்னும் பசிப்பான் நிலையினையொக்கும். இத்தகைய தவத்தினைச் செய்து மீண்டும் பிறப்பினை எய்தித் துன்புறுவாரும் பலர். அவர்களையே 'தலைப்பறிகின்றார்' என்றருளினர். இத்தகையார் தாங்கள் தங்கள் கொள்கையில் கேட்டறியாத புதுமையும் மேன்மையும் சிறந்த தத்துவங்களை நாடுந் தன்மையிலாராவர்.

(.அ. சி.) தலைப்பறிகின்றார் - மீண்டும் பிறக்கின்றவர்கள். நவமான - மேலான.

(16)

1984. நாடோறும் ஈசன் நடத்துந் தொழில்உன்னார்
நாடோறும் ஈசன் நயந்தூட்டல் 1நாடிடார்
நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

(ப. இ.) பொழுதுவிடிவதும் பொழுதுமுடிவதும் உயிரினை ஈர்ந்து செல்லும் வாளின் ஈாப்புக்கணக்கென எண்ணாதவர் தங்கட்கு நாள் இன்பமாகக் கழியாநின்றதென எண்ணும் அறியாமைமிக்க நாள் வினையாளராவர். இவர்களையே திருவள்ளுவநாயனார் 'ஆசையுட்பட்டு அவஞ்செய்வார்' என்றருளினர். அத்தகைய நாள் வினையாளர்கள் ஒவ்வொரு நாளும் சிவபெருமான் செய்தருளும் ஐந்தொழிலின் அருமைகளை நினையார். ஒவ்வொரு நாளும் அச் சிவபெருமான் வினைப் பயன்களைப் பிறழா நிகழ்ச்சியாக ஆருயிர்களை ஊட்டும் அருளினையும் நாடார். ஒவ்வொரு நாளும் திருவருளால் செவ்விவாய்ந்த நல்லுயிர்க்குத் திருவடியுணர்வை நல்கி ஆட்கொள்ளும் முறைமையினையும் நாடார். ஆட்கொள்ளப்பட்டோர் நல்லார் என்று அழைக்கப்படுவர். இவர்களே சீவன்முத்தர். சீவன்முத்தரெனினும் சிறப்பினர் எனினும் ஒன்றே.

(17)


24. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை

1985. ஆக மதத்தன ஐந்து களிறுள
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனு மெய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி 2யோமே.

(ப. இ.) மிக்க மதத்தை உடையனவாகிய களிறுகள் உடம்பகத்து ஐந்துள. அவை செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்பன. இவற்றையே நாயனார் 'உரன் என்னும் தோட்டியான் ஒரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்பிற்கோர் வித்து' என வாய்மொழிந்தனர். அவை அடங்கா மதங்கொண்டிருப்பதால் கந்தாகிய கட்டுத்


1. செய்வினையும். 12. சாக்கியர், 5.

" நாளென. திருக்குறள், 334.

2. தொண்டரஞ்சு. சம்பந்தர், 2. 114 -1.

" நாமல்ல, சிவஞானபோதம், 10. 2 - 9.