836
 

(ப. இ.) எறும்புந் தன்கையால் எண்சாண் என்று கூறும் முறைப்படி அவரவர் உடம்பு அவரவர் கையளவுக்கு எண்சாணே ஆகும். அத்தகைய உடம்பில் அறிதற்கருவி செய்தற்கருவியாகிய கண் கால் முதலிய உறுப்புகளும், இவ்வுறுப்புகளின் ஊடே கலந்துநின்று தொழிற்படுகின்ற புலன்களாகிய இந்திரியங்களும், மேலோதிய புறப்புறக்கருவி அறுபதும் அகப்புறக்கருவி எட்டும் ஆகிய அறுபத்து எட்டும் கூடியது யாக்கை. அகக்கருவி யென்பது காலம், ஊழ், உழைப்பு, உணர்வு, விழைவு, மருள் என்னும் ஆறுமாகும். இவ்வுடம்புகள் நால்வகைப்படும். அவை வருமாறு பருவுடல், நுண்ணுடல், போர்வையுடல், முதலுடல் என்பன. ஒரு புடையொப்பாகப் பருவுடல் பூதம் ஐந்து பொறிபத்து ஆகப் பதினைந்தாகும். நுண்ணுடல் புலனாகிய தன் மாத்திரை ஐந்து, மனம் எழுச்சி இறுப்பு மூன்று ஆக எட்டாகும். போர்வையுடல் குணம், விழைவு, உணர்வு, உழைப்பு, ஊழ், ஊழி (காலம்) என்னும் ஆறாகும். முதலுடல் தூவாமாயை ஒன்றாகும்.

(அ. சி.) அறுபது + எட்டு - புறக்கருவிகள் அறுபதும், புரியட்டகமும். நாலுடம்பு - தூலம், சூக்குமம், காரணம், மகா காரணம்.

(6)

2089.உடம்புகள்1 நாற்கும் உயிராய சீவன்ஒடுங்கும் பரனோ டொழியாப் பிரமங்கடந்தொறு நின்ற கணக்கது காட்டிஅடங்கியே அற்றது ஆரறி வாரே.

(ப. இ.) நால்வேறு வகையாகக் கூறப்படும் உடம்புக்கு உயிராக விளங்குவது ஆருயிராகிய சீவன். அவ்வாருயிர் என்றும் பேருயிராகிய சிவத்துடன் ஒடுங்கியே யிருக்கும். ஆருயிரைவிட்டுப் பிரியாத சிவன் ஒருவனே. அச் சிவன் ஒருவனாக இருந்தே எல்லாவுயிருடனும் பலவாக விருப்பதற்கு ஒப்புக் கடம் பலவற்றிலும் காணப்படும் கதிரவனின் நிழல் ஒப்பாகும். கடம் உடம்பு, அதன்கண் காணப்படும் நீர் உயிரும், கதிரவனின் நிழல் கடவுளுமாகும். இம்முறையாக முப்பொருளும் நிற்கும் முறைமையினைத் திருவருள் கைவரப் பெற்றாரன்றி மற்று யாரறிவர். ஏகாரம் எதிர்மறை; ஒருவரும் அறியார் என்பதாகும். 'காணம் கடமுடம்பு கண்ணுநீர் தானுயிராம், பேணுகதிர் நீழலிறை பேசு' என்பதனை நினைவுகூர்க. ஒருபொருட் கொள்கையராகிய ஏகான்மவாதிகளும் இவ்வுவமையைத் தங்கட்குச் சார்பென மயங்கிக் கூறுவர். உவமையைப் பொருளொடு படுத்துரைக்குங்கால் கடம் : உடல், கதிரவன்: கடவுள், கதிரவனின் நிழல் எல்லாக் கடங்களிலும் வெவ்வேறாகத் தோற்றும் கடவுள். ஆனால் கடத்தின்கண்ணுள்ள நீர் எதனைக் குறிக்கும் என்று கூறுதல்வேண்டும். நீரில்வழி நிழல்தோன்றுமா? என்று நினைதலும் வேண்டும். இவையெல்லாம் பொருந்தக் கூறமுடியாமையின் அவர்க்கது பொருந்தாமை அறிக.

(7)

2090.ஆறந்த மாகி நடுவுடன் கூடினால்தேறிய மூவாறுஞ் சிக்கென் றிருந்திடுங்கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியேஊறும் உடம்பை உயிருடம் பெண்ணுமே.


1. (பாடம்) உடம்புக்கும்.