2143. ஆணவ மாதி மலமைந் தலரோனுக்கு ஆணவ மாதிநான் காமாற் கரனுக்கு ஆணவ மாதிமூன் றீசர்க் கிரண்டென்ப ஆணவ மொன்றே சதாசிவற் காவதே. (ப. இ.) ஆணவம், கன்மம், மாயை, மாயை யாக்கம், நடப்பாற்றலாகிய திரோதாயி என்னும் ஐம்மலங்களும் நீங்கப்பெறாத நிலையிலுள்ளவன் அயன். மாயையாக்க மொழிந்த ஏனைநான்கு மலங்களும் நீங்கப்பெறாதவன் அரி. ஆணவம், கன்மம், திராதாயியாகிய மறைப்பாற்றல் ஆகிய மூன்றும் நீங்கப்பெறாதவன் அரன். ஆணவம் மறைப்பாற்றல் இரண்டும் நீங்கப்பெறாதவன் ஆண்டான். ஆணவம் மட்டும் நீங்கப்பெறாதவன் அருளோன் என்ப. (அ. சி.) மலம் ஐந்து - ஆணவம், மாயை, கன்மம், மாயேயம், திரோதம். (16) அத்துவாக்கள்(வழிகள்) 2144. தத்துவம் ஆறாறு தன்மனு வேழ்கோடி மெய்த்தகு வன்னம்ஐம் பானொன்று மேதினி ஒத்திரு நூற்றிரு பான்நான்கெண் பானொன்று வைத்த பதங்கலை யோரைந்தும் 1வந்தவே. (ப. இ.) மெய்கள் மண்முதற்சிவம் ஈறாக முப்பத்தாறு. மந்திரங்களின் முடிவுகள் ஏழு. கோடி - முடிபுகள். அவை வருமாறு: நம, சுவாகா, சுவதா, படு, வவுசட், வசட் என்பன. வன்னம் என்று சொல்லப்படும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று. உலகங்கள் புவனம் இருநூற்று இருபான்நான்கு (224). சொற்கள் - பதங்கள் எண்பத்தொன்று. கலைகள் ஐந்து. முடிபு ஏழினையும் 'சொல்லார் நமசுவா காசுவதா தோற்றுபடு, வில்லார்வவு சட்வசட்டேழ் வேறு'. என்பதனால் நினைவுகூர்க. (அ. சி.) மனு - மந்திரம். ஏழ்கோடி - ஏழுவகை முடிவைப்பெற்றது. அஃதாவது: நம, சுவாகா, சுவதா, படு வவுஷ, வஷட் முதலியன. (1) 2145. நாடிய மண்டல மூன்று நலந்தெரிந்து ஓடு மவரோ டுள்ளிரு பத்தைஞ்சுங் கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. (ப. இ.) உடலகத்தே நாடப்படும் மண்டிலங்கள் மூன்று. சிவ குருவினருளால் அவற்றின் நன்மைகளை அறிந்துநிற்பாருடன் கலந்து நடப்பது இருபத்தைந்து மெய்களாகும். அவற்றுடனும் சிவகுருவின்
1. அழிவிலாக், மந்திரங்கள், வித்தையின்மந், சாந்தியா. சிவஞான சித்தியார், 8. 1 - 6 - 9.
|