866
 

2151. ஆணவ மாயையுங் கன்மமு மாமலங்
காணு முளைக்குத் தவிடுமி யான்மாவுந்
தாணுவை யொவ்வாமற் றண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் 1பிரித்துமே.

(ப. இ.) ஆணவம் உமியை ஒக்கும். மாயை தவிட்டை ஒக்கும். கன்மம் முளையையொக்கும். ஆருயிர் அரிசியினையொக்கும். ஆவி கலப்புத் தன்மையால் சிவனுடன் புணர்ப்பாய்ப் பிரிவின்றி நிற்பினும் அரிசியை ஒக்குமேயன்றிச் சிவனையொவ்வாது. திருவருளால் உன்னுடைய பாசங்களை விட்டுவிலகிச் சிறப்பருளும் சிவபெருமான் திருவடிப் பெருமையினைப் பேணுவாயாக. தாணு - சிவபெருமான்; தூண் என்னும் சொல்தாணு என மருவிற்று. தண்டுலம் - அரிசி.

(அ. சி.) காணும் - முளைக்கின்ற. தாணு - சிவம். தண்டுலம் - அரிசி.

(5)

2152. பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடிற்
பசுக்கள் தலைவனைப் பற்றி 2விடாவே.

(ப. இ.) ஆருயிர்கள் பலவும் பலவேறு வகையின; ஆயினும் அவற்றின் அறிவுநிலை ஒன்றேயாம். அஃதாவது எல்லாவுயிர்களும் சிவபெருமான் விளக்க விளங்கும் சிற்றறிவினவே. ஆணவ மலவன் பிணிப்பின. அதற்கு ஒப்புப் பசுக்கள் பல நிறத்தன. ஆனால் அவற்றின் பாலெல்லாம் தூயவெண்மையான ஒரு நிறத்தன. இவ்வாருயிர்களைக் கொண்டு நடத்தும் பேருயிராகிய சிவபெருமான் ஒருவனே. அவன் முற்றுணர்வினனே. அதற்கு ஒப்புப் பசுக்களை மேய்க்கும் ஆயன் ஒரு வண்ணமாவன். அப் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் மேய்த்தற்றொழிற்குரிய கோலைக் கீழே போட்டுவிட்டால் அப் பசுக்கள் மேய்ப்பவனைச் சூழ்ந்து விலகாது நின்றுவிடும். கோல்போடுதல் தூண்டுதலைச் செய்யாமை. இவ்வுண்மை வரும் சேக்கிழாரடிகள் திருமறையான் உணர்க:

"பதவு காலங் களின்மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவகற்றி
இதமுண் டுறையு நற்றண்ணீ ரூட்டி யச்ச மெதிர்நீக்கி
அதர்நல் லனமுன் செலநீழ லமர்வித் தமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாம லுடையோ ரில்லந் தொறுமுய்த்தார்."

- 12. சண்டேசுரர், 26.

சிவபெருமானாகிய முழுமுதல்வன் உலகியலை நடாத்தும் நடப்பாற்றலாகிய சலமகளை யொடுக்குவதே கோல்போடுவதாகும்.சலமகளையொடுக்


1. அல்லன்மிக. சிவப்பிரகாசம், பொது - 13.

" நெல்லினுக்குத். சிவஞானசித்தியார், 11 - 6.

" விற்றூணொன். அப்பர், 6. 8 - 1.

2. செறிகழலும். அப்பர், 6. 18 - 8.

" ஒன்றென்ற. சிவஞானபோதம், 2. 1 - 2.

" ஆவேறு. நாலடியார், 118.