919
 

2269. எல்லாந்தன் னுட்புக யாவுளுந் தானாகி
நல்லாந் துரியம் புரிந்தக்கால் 1நல்லுயிர்
பொல்லாத வாறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

(ப. இ.) திருவருளால் மேல்நிலையில் நிற்கும் ஆருயிர் சிவன் திருவடிக்கண் உறைத்துநிற்கும். அதனால் சிவனிறைவு எங்கணும் தான் நிறைந்துநிற்கும். பாலிற் கலந்த மோர் பால் முழுவதும் தயிராதற்கு அப்பால் முழுவதினும் கலப்பது இதற்கொப்பாகும். அதுபோல் ஆருயிர் சிவனுடன் வேறறக் கலந்துநிற்கும். அந் நிலையில் எல்லாப் பொருள்களும் ஆருயிரின் அகத்துள் ஒடுங்கும். சிவனுடன் ஒற்றித்து நுகரும் ஆருயிர் சிவன்கண் உறைதலால் சிவன் எழுந்தருளியிருப்பதாகிய மெய்யருக்குள் சிவன் இருப்பதால் அத் தொடர்பினால் எல்லாப் பொருள்களுள்ளும் ஆருயிரும் விரவிநிற்கும். அப்பொழுது முப்பத்தாறு மெய்களும் திருவருள்காட்சியான் அகலும். அகலவே எல்லாப் பொருள்களினுள்ளும் ஆருயிர்கள் நிற்கும்.

(5)

2270. காய்ந்த இரும்பு கனலை யகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத் துரிசக 2லாதன்றே.

(ப. இ.) கரும்பொன்செய் கொல்லன் உலையில் பழுக்கக்காய்ச்சிய இரும்பு தீவண்ணமாக விளங்கும். 'அவ் விரும்பு உலையைவிட்டு மாறியும் தீவண்ணத்தோற்ற நிலையைவிட்டு மாறியும் பண்டைய இரும்புபோல் காணப்படும். அங்ஙனம் காணப்பட்டாலும் கைவைத்தால் சுடும். காரணம் வெப்பம் ஆறாமை என்க. அதனைத்தான் வாதனை என்பர். இரும்பின்கண் கனல்தோற்றம் இல்லை. கனலென வாதனை நிற்கின்றது. வாதனை - பசை. அதுபோல் ஆருயிர்க்கு அகக்கலன், அகப்புறக் கலன், புறக்கலன்களாகிய முத்திறக்கலன்களும் சிவகுருவின் திருவருளால் முற்றும் அற்ற பேருறக்கமாகிய துரியநிலையில் தோய்ந்த கருமத்துரிசு என்னும் பசையறாதென்க. அகக்கலன் ஊழிமுதல் ஐந்து, அகப்புறக்கலன் எண்ணமுதல் நான்கு, புறக்கலன் அறிதற்கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து என்பன. துரிசு - வாதனை.

(அ. சி.) கருமத்துரிசு - கன்ம வாசனை.

(6)

2271. ஆன மறையாதி யாமுரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிநனா வத்தையில்
ஆன வகையை விடுமடைத் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

(ப. இ.) எல்லாமான மறை செந்தமிழ்த் திருவைந்தெழுத்தேயாம் அவை இருவகைப்படும். ஒன்று 'நமசிவய,' மற்றொன்று 'சிவயநம'


1. சூரியகாந். சிவஞானசித்தியர், 8. 2 - 18.

2. இங்குளி. சிவஞானபோதம், 10. 2 - 3.