(ப. இ.) செயற்கைப்பொருள்களால் யானை முதலியவற்றைச் செய்து அவை இயங்குமாறு பொறிகளை அமைத்து இயக்கப்படுவது பொய்க்கரியாகும் அக் கரி இயங்கும் தொழிலை ஒப்ப யாண்டும் பரந்துள்ள நிலம் முதலிய ஐம்பூதங்களால் ஆக்கப்படும் இவ் வுடலும் ஆடுகின்றது. உடல் உலகுகளுக்குரிய படைப்பு முதலிய தொழில்களும் அயன் அரி அரன் முதலியவர்களால் நிகழ்வனவும் இத்தகையவே. ஆருயிர்க்கு உடல் கலன் உலகுகளை உள்ளத்தால் படைத்து. அவற்றுடன் ஆருயிர்களை இயைத்து இயக்குவது திருவருள். இவற்றின் சேர்க்கையால் ஆருயிர்கட்கு அறிவை விளக்குவிப்பதும் திருவருள். அவற்றினின்றும் செவ்வி வருவித்துப் பிரிவிப்பதும் திருவருள். பிரித்துச் சிவபெருமான் திருவடியில் சேர்ப்பிப்பதும் திருவருள். எல்லாம் ஆற்றுவித்து இணையில் இன்பம் துய்ப்பிப்பதூஉம் திருவருளேயாம். கரி - யானை; கரத்தையுடையது. கரம் கருமம் என்னும் அடியாகத் தோன்றிய தமிழ்ச்சொல். விலங்கினங்களுள் யானை ஒன்றினுக்கு மட்டுமே மூக்குக் கைபோன்று நீண்டு அமைந்ததுமட்டுமன்றிக் கைபோன்று வேலைக்கும் பயன்படுகிறது. அதனால் யானை 'கிரி' என்னும் சிறப்புப் பெயரான் வழங்கப்படலாயிற்று. (அ. சி.) பொய்க்கரி - மரயானை. பாவிய பூதம் - மண் முதலிய பூதங்கள். பூவியில் - உலக இயல். (41) 2306. ஆறா றகன்று தனையறிந் தானவன் ஈறாகி யாவினு மியாவுந் தனிலெய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றா னம்மருள் தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் 1சிவமாமே. (ப. இ.) மண் முதல் ஒலி ஈறாகச் சொல்லப்படும் முப்பத்தாறு மெய்களின் உண்மைகளை அருளால் அருள் நூற்களின் வாயிலாக உணர்ந்து அவற்றினிடத்துக்கொள்ளும் பற்றை விடுதல்வேண்டும். விடுதல் என்பது அம் மெய்கள் நாமல்ல என்றும், நமக்கு ஆண்டவனால் தரப்பட்ட இரவற்கருவியே என்றும், நமக்கு அவை என்றும் இரவலே என்றும், அவற்றால் ஆண்டவன் திருப்பணியைப் புரிதல் வேண்டும் என்றும், அவை நிலை இல்லன என்றும் கொண்டு பற்றின்றி நல்லன புரிந்தொழுகுதல். அங்ஙனம் ஒழுகிவரும் உரவோன், தன்னை அடிமை என்று அறிந்தவனாகின்றான். அடிமை என்றறிந்த மெய்யறிவினால் அவன் சிவத்தொடுங்கிச் சிவனாகின்றான். ஒடுங்கிச் சிவமாவதென்பது நிழலுருவில் ஒடுங்கியும் பெயரில் ஒடுங்கியும் பொருள் தோன்றுவது போன்றதாகும் இவனையே சிறப்பினன் எனக் கூறுவர். எல்லாவற்றுடனும் தான் விரவிநிற்பதால் தான் ஈறாவதும், தன்னில் எல்லாப் பொருள்களும் அடங்கி நிற்பதால் அவை தன்னிலெய்தி நிற்கும் தன்மையும் தோன்றும். தோன்றவே அவன் அவற்றிற்கு வேறாவன். வேறாகவே அருள்வெளியில் புகுவன். புகுந்தால் முற்றும் விடுதலை உற்றவனாவன். வனப்பாற்றலாகிய சிறந்த திருவருளைத் தெளிவன். தெளிந்தால் சிவகுரு எழுந்தருள்வன். சிவதீக்கை செய்தருள்வன். சிவதீக்கை பெற்ற வுயிர் சிவமாம் பெருவாழ்வு எய்தும். (அ. சி.) ஆனவன் - சிவமயம் ஆனவன். யாவும் தனில் எய்த - எல்லாப் பொருளும் தன்னிடத்தில் தோன்ற வேறாய் - அப்பொருள்
1. மேவிய. 11. பட்டினத். திருவிடை - மும் - 13.
|