949
 

(ப. இ.) கலை என்னும் திருவருளாற்றல் தொன்மையதாகும். இக் கலையே முறையும் மறையும் எனப்படும் ஆகம வேதங்களாகும். அம் முறை மறைவழியின் நிறையின் நீங்காதொழுகுதல் தந்திரமாகும். மனம் முதலிய கருவிகள் நீங்கி உணர்விற்கணிக்கும் ஒண்மையவாம் 'சிவசிவ' மந்திரமாகும். சிவபெருமானைத் தெளிவிக்கும் சிவ குருவின் திருவார்த்தை உபதேசமாகும். உபதேசம் - குருமொழி.

(அ. சி.) மனாதி உடலல்லா மந்திரம் - மனம் முதலிய கருவிகளும் சரீரமும் அல்லாது தனித்து நிற்கும் மந்திரம், அஃதாவது காரண பஞ்சாக்கரம்.

(10)

2339. தேசார் சிவமாகுந் தன்ஞானத் தின்கலை
ஆசார நேய மறையுங் கலாந்தத்துப்
பேசா வுரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி 1தானன்றே.

(ப. இ.) ஞானக்கலை என்பது அளவில் பேரொளிப் பகவனாகிய சிவபெருமானாகும். ஆன்றோரைப் பின்படர்ந்து ஒழுகுவது ஆசாரம் என்ப. அவ்வொழுக்கத்துத் தலைநிற்கும் பேரன்பு நேயம் என்ப. இவ்விரண்டும் சொல்லப்படும் கலாந்தமாகும். இவ் வழி ஒழுகி வாய் வாளாமையாகிய உரையுணர்வற்ற பெருநிலையுற்றோன் பெருந்தகையாவன். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமானாவன்.

(11)

2340. தானவ னாகுஞ் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது
ஞான மெனஞேய ஞாதுரு 2வாகுமே.

(ப. இ.) ஆருயிர் பேருயிர்க்கண் ஒடுங்குதலேதானவனாகும் சமாதி நிலை என்ப. இந்நிலையினைத் தலைப்படுதலே கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம், போதாந்தம், சித்தாந்தம் என்ப. சிறந்த சித்தாந்தம் எனப்படுவது காட்சி, காணப்படும் பொருள், காண்போன் என்னும் முத்திற முடிபும் எத்திறமும் நீங்காது கொள்ளும் நிலைமைத்தாகும். ஞானம் - காட்சி. ஞேயம் - காணப்படும் பொருள். ஞாதுரு - காண்போன்.

(அ. சி.) ஞேயம் - காணப்படு பொருள். ஞாதுரு - காண்பவன்.

(12)

2341. ஆறந்த முஞ்சென் றடங்குமந் நேயத்தே
ஆறந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞானக் குறியுடன் வீடவே
தேறிய மோனஞ் சிவானந்த வுண்மையே.

(ப. இ.) மேலோதிய அறுவகை அந்தமும் நேயமாகிய பேரன்புப் பொருளாம். சிவபெருமான்கண் ஒடுங்கும் ஞாதுரு என்று சொல்லப்


1. ஒழுக்கம். சிவஞான சித்தியார், 2. 2 - 20.

2. காண்பானும். உமாபதிசிவனார், வினாவெண்பா, 11.