963
 

2370. விட்ட 1விடமேறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாச மெய்கண்டோன் 2மேவுறான்
கட்டிய கேவலங் காணுஞ் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.

(ப. இ.) மெய்ப்பாவகனால் விடம் ஏறாவாறு போன்று திருவருளால் ஆருயிர்களை விட்டு வேறாகி அகன்ற பசுபாசங்களை மெய்கண்டோனாகிய சிறப்புயிர்க் கிழவன் மேவுதலைச் செய்யான். மேவுதல் - பொருந்துதல். தொன்மையிலே பிணித்த மலத்தனிமையாகிய புலம்பு சகலமாகிய புணர்ப்பினை எய்துவிக்கும். குறிக்கப்படும் நனவின்கண் அப்பால் நிலைக்கண்ணும் இப் புலம்பு நிலையாகிய தனிமை தோன்றும். புலம்பு - கேவலம். அப்பால்நிலைத்தனிமை ஆணவத்துடன் பிணிப்பின்றி அருளுடன் பிணிப்பூன்றி அறிவு மறைப்பின்றி அனைத்துலகும் கருவியும் மறைப்புற்று நிற்கும் நிலைமை. மெய்கண்டோன் - சீவன் முத்தன்.

(அ. சி.) விடம் - நஞ்சு. சுட்டும் - குறித்தறியும்.

(5)

2371. நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்தன் நிலையறி வாரில்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

(ப. இ.) ஆராயப்படும் பதி பசு பாசம் பலவாக விரியும். நீடும் - விரியும். என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று நிலவும் சிவபெருமானாகிய நித்தன் நிலையினை உள்ளவாறு அறிவாரில்லை. தொன்று தொட்டுத் தென்பட்டும் படாதும் வருகின்ற முப்பொருள்களும் என்றும் ஒன்றுபோல் நிலைப்பதாகிய பதியினிலைமையும், சார்பியாகிய பசுவுக்கு நேர்ந்த பசு பாச நீக்கமும் திருவருளால் ஆராயத் தொடங்கிய சைவ நற்சீலர்க்கு நந்தியாகிய சிவபெருமான் விளங்குமாறு அளித்தருளினன்.

(அ. சி.) நீடும் - விரியும். நித்தன் - சிவன். நாடிய - விரும்பிய.

(6)

2372. ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே றெனநிற்கும்
ஆய பலிபீட மாகுநற் பாசமாம்
ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே.

(ப. இ.) கலப்பினால் எல்லாமாய் பொருட்டன்மையால் அல்லவுமாய் உள்ள பதியாகிய சிவபெருமான் அருட்சிவலிங்கமாகும். என்றும் பொன்றாகச் சார்பினவாய் நிற்கும் சார்பியாகிய பசுவும் அருட் சிவக்கொழுந்தின் திருமுன் ஒருங்கியவுளத்தோடுற்று ஒரு நோக்காய் வலிமை மிக்க ஆனேறு என அசைவின்றி நிற்கும். அவ் வானேற்றின் பின் காணப்படும் பலிபீடம் ஆருயிர்களினின்றும் அருளால் விடுபட்ட 'யான் எனது செருக்காகிய' பசு பாசங்கள் தங்கி மங்குமிட


(பாடம்) 1. விடமேறு.

1. அசத்தறியாய். சிவஞானபோதம், 6. 1 - 1.