979
 

ஏற்படும். இதன்மேல் ஏற்படும் உறக்கமும் உண்டு. அதனை ஒழிவாகிய உபசாந்தம் என்ப. அதுவும் நீங்கியவிடத்துச் சிவபெருமான் திருவடிக்கண் ஏற்படும் அரிய பெரிய துரியம் என்ற சொல்லப்படும். இந்நிலை அருளால் ஆக்கப்படுமுண்மை புலப்படுத்துவதே அசிபதமாகும்.

(8)


10. முப் பரம்

2406. தோன்றியென் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று மடிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி யின்புற் றிருந்தே யிளங்கொடி
நான்று நலஞ்செய் நலந்தரு மாறன்றே.

(ப. இ.) என் உடம்பகத்துத் தோன்றி என்னுள்ளே வலம் சுழித்து எழும் மண்டிலங்கள் மூன்றுள. அவைமுறையே தீமண்டிலம், ஞாயிற்று மண்டிலம், திங்கள் மண்டிலம் எனச் சொல்லப்பெறும். இம்மூன்று மண்டலத்துக்குரிய முழுமுதல்வனாகிய சிவபெருமானைத் திருவருளால் ஏற்றுப்பொருந்தி இன்புற்றிருப்பம்; இறங்கொடியாகிய குண்டலினியை உயிர்ப்புப் பயிற்சியால் எழுப்பி அதனுடன் கலந்துநின்றுணர்ந்த காலத்தென்க. அக்காலத்து முழுநலமும் வந்து எய்தும் என்க.

(அ. சி.) மூன்றுபடி மண்டலம் - சோம, சூரிய, அக்கினி மண்டலங்கள். இளங்கொடி - குண்டலி, நான்று - கலந்து.

(1)

2407. மன்று நிறைந்தது மாபர மாயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியுங்
கன்று நினைந்தெழு தாயென வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் 1காமே.

(ப. இ.) முழுமுதற் சிவபெருமானாகிய விழுப்பொருள் அழிவில்லாத அறிவுப் பெருவெளியாம் மன்றின்கண் நிறைந்துள்ளது. எவர்க்கும் எவைக்கும் மேலாகிய பெரும்பொருளாயதும் அதுவே. எங்கணும் நீக்கமற நின்றுநிறைந்ததும் அதுவே. அவ்வவ் வுயிர்களின் செவ்விக் கேற்ப நந்திப்பெருமானும் நேர் எழுந்தருள்வன். அப் பெருமான் கன்றை நினைந்து கனைத்தெழுந்தோடி வரும் தாயென எழுந்தருளிவந்து ஆட்கொண்டருள்வன். அங்ஙனம் ஆட்கொண்டருளியபின் அவன் மலை நிறைந்த விளக்கொத்து அலைவின்றி நிறைந்த எண்குண விளக்காய் இலங்கியருள்வன்.

(2)

2408. ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரங்
கூறா வுபதேசங் கூறிற் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் 2பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.


1. மன்றி. 12. சேரமான், 135.

2. அகர. திருக்குறள், 1.