(ப. இ.) உடலினைப் புறத்துப் பேணும் உணவு சமைத்தற்கு அடுப்பும், துடுப்பும், பானையும், அரிசியும், எரி கொள்ளியும், எரியும் வேண்டுவன. அதுபோன்று உடலகத்து அமிழ்த வுணவு சமைப்பதற்கும் அத்தனையும் வேண்டும். அம்முறையில் உடம்பு பானை; உயிர்ப்பு அரிசி; வலப்பால் இடப்பால் மூக்குகள் துடுப்பு; கொப்பூழ் அடுப்பு; ஞாயிறு திங்கள் எரி தீ; உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற் காற்று, ஒலிக்காற்று நிரவுகாற்றென்னும் ஐந்தும் எரிகொள்ளி. ஏற்றி இறக்கி நிறுத்திச் செய்வதாகிய உயிர்ப்புப் பயிற்சியாம் சமையலினைச் செய்து புருவ நடுவின்கண் அமிழ்தத்தை ஆக்குங்கள். அதனால் உடல் நலமுற நீண்டு நிற்கும். ஏனையார்க்கு வீணாகக் காலங்கள் பல கழிந்து மேற்போயின. பயிற்சியுடையார்க்கு உடம்பு நெடுங்காலம் நிலைபெறும். வரையறுத்த அகவை கழியினும் மேலும் நெடுநாள் வரை செய்யப்படும். அரிசி - புருவ நடுவிலுள்ள அமிழ்து. (அ. சி) துடுப்பு - இடைகலை பிங்கலை. அடுப்பு - நாபித்தானம். கொள்ளி - ஞானாக்கினி. பானை - உடல். அரிசி - உயிர். (7) 236. இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய் உண்பது வாச மது1போல் உயிர்நிலை இன்புற நாடி நினைக்கிலு மூன்றொளி கண்புற நின்ற கருத்துள்நில் லானே. (ப. இ.) இன்புறும் இயல்பு வாய்ந்த வண்டுகள் பூவின் நறுமணம் கண்டு அம் மணத்தின் வழியே சென்று பூவினகத்துள்ள மண நிறைந்த மதுவினையே நுகரும். அதுபோல் ஆருயிர்கள் நிலைத்த திருவடிப் பேரின்பத்தினை நுகர நினைக்கினும், ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று ஒளிப் பொருள்களைக் கண்களாகக் கொண்டு திகழும் சிவபெருமான் புறத்தே காணும்படி வேறாக நில்லான். உயிரொடு பின்னி அறிவிற்காணும்படி அகத்தே நிற்பன். கண்புறம் - புறக்கண்; சுட்டுணர்வு. நில்லான் - வேறாக விளங்கான். (அ. சி.) மூன்றொளி கண் - மூன்று கண் ஒளி; (சோமசூரிய அக்கினி வடிவான சிவன்). புறநின்ற - சேரமாட்டான். (8) 237. ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம் போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின் நாம்விதி வேண்டும் தென்சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.2 (ப. இ.) கூறுங்கால் எழுவகைப் பிறப்பினுட் சிறந்த மக்கட் பிறப்பை எடுக்கும் அருமைப் பாட்டினை அருளால் பெற்ற உரனுடை உள்ளத்தார்க்கு வேறு நாம் கூறவேண்டிய விதி யாதுளது. மனையறம் பேணும் பொருட்டு அறநூல் கூறும் விதியின்படி செய்தல் வேண்டும். திருவடிப் பேற்றினை அடைதற்கு அவனருள்தரும் தமிழாகம முறைப்படி தூயோனாகிய சிவபெருமானைப் பாடிப் பரவிப் பணியுங்கள். போம்
1. தினைத்தனை. 8. திருக்கோத்தும்பி, 3. 2. அண்டசம். சிவஞான சித்தியார், 2 - 4- 17.
|