1067
 

ஒன்பதாம் தந்திரம்
(மகுடாகமம்)
1. குருமடதரிசனம்

2601. பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும்எம் ஈசன் தனக்கென்றே யுளகிக்
குவியுங் குருமடங் கண்டவர் தாம்போய்த்
தளிரு மலரடி சார்ந்துநின் 1றாரே.

(ப. இ.) அன்பால் அமைக்கப்படும் செஞ்சாலியரிசிச் சோறாகிய திருவமுதுப்பலியும், முத்தழற்கண் நத்திச் சொரியும் நெய் அவியும், பரந்து சித்தாந்த சைவத் திருமடங்களினெல்லாம் நறும்புகை கமழா நிற்கும். எனவே மெய்யடியார்கட்கு விருந்தயரச் சமைக்கும் சோறடு பகையும். பொருந்திய சிவ வணக்கத்தின்பொருட்டுச் செய்யப்படும் வேள்வித் தீயில் நெய்பெய் புகையும் எங்கணும் பரந்து உள்ளம் பொங்க உலகும் பொங்கின என்க. திருவருளால் தோன்றிய செந்தமிழ்த் திருமறை திருமுறை முதலிய சிவநூற்களின்கண் பிறப்பறுக்கும் அருமறைகளே பேசப்பட்டுள்ளன. அவைகளே கீதத்தொலி எனப்படும் அவ்வொலிகளே எங்கணும் முழங்குவ. எல்லாம் சிவபெருமான் ஒருவனையே முழுமுதலாகக்கொண்டு நிகழ்வவாயின. அவற்றை நெஞ்ச நெக்குருகி நினைந்து அன்பருளமெலாம் குவியும். அதன் புறவடையாளமாகக் கைகளும் தலைமீதேறிக் குவியும். அத்தகைய சிவகுருமடங்களைக் கண்டவர் செம்மலர் நோன்றாளாம் சிவபெருமான் திருவடியிணையினைச் சார்ந்து இன்பார்ந்து என்றும் சிற்பர்.

(அ. சி.) பலியும் - அன்னப் பலியும் (ஆரிய வேள்வியில் செய்யும் உயிர்ப்பலி அல்ல). அவியும் - பறப்பையின் மூலம் ஓமத்தீயில் சொரியும் நெய் அவியும். ஒலி - தமிழ்வேதம் ஓதும் ஒலி. குவியும் - மனம் அடங்கும். தளிரும் - குளிர்ந்து தளிர்ந்த. பறப்பை: நெய் வைக்கும் மரவை.

(1)

2602. இவனில்ல மல்ல தவனுக்கங் கில்லை
அவனுக்கும் வேறில்லம் உண்டா அறியின்
அவனுக் கிவனில்ல மென்றென் றறிந்தும்
அவனைப் புறம்பென் றரற்றுகின் 2றாரே.


1. ஆகத்தோர். அப்பர், 6. 45 - 2.

2. திருக்கோயி. சிவஞானசித்தியார், 12. 3 - 2.

" எவரேனும். அப்பர், 6. 61 - 3.

" கண்ணுதலும். இருபாவிருபது, 1.

" செம்மலர். சிவஞானபோதம், 12.