1135
 

(ப. இ.) ஆருயிர்கட்கு அமைந்த நுண்ணுடம்பு புரியட்டகம் எனப்படும். அது புலனாகிய தன்மாத்திரை ஐந்தும், மனம் எழுச்சி இறுப்பு (புத்தி) என்னும் மூன்றும் கூடிய எட்டினாலும் ஆயதாகும். அவ்வுடலே 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்னும் மாறாப் பிறப்புடலாகும். அவ் வுடலும், ஐம்போர்வையும் பொருந்திய விடத்து அமைந்து விளங்கும் ஆள்நிலை ஒன்றுங்கூட்டி மெய் ஒன்பதாகும். அவ் வொன்பது வகையான் பின்னும் ஒன்பதாகும். வகை பொதுமையும் தனிமையும் இவற்றைப் பொதுவும் சிறப்பும் எனவுங் கூறுப. சமட்டி வியட்டி எனினும் பொருந்தும். பருவுடலுடன் கூடித் தொழிற்படு நிலை தனிமை அல்லது சிறப்பு. கூடாது நிற்கும் நிலைமை பொதுமை. 'தத்', 'துவம்' என்னும் இருமொழிக்கண்ணும், அன்பான் இரண்டும் விட்டு நீங்காது ஒட்டியோங்குவது தூங்குவது என்னும் கூட்டத்தினைப் புலப்படுத்தும் 'அசி' மொழிக்கண்ணும் சிவபெருமான் ஆட அவை நிகழும். அஃதாவது ஆருயிரும் பேருயிரும் ஓருயிராய்ச் சேர்வுற்றுப் புணர்ந்து தீர்வரிய இன்பந்திளைத்தல். தேனினை நுகர்வான் தேனும் நாவும் தானும் ஒன்று கூடிய விடத்து நுகரும் இன்ப நுகர்வு இதற்கு ஒப்பாகும். ஆருயிர்களின் சீரில் நிலைகண்டு துன்புறும் நடப்பாற்றலாகிய ஆதி சத்தியினுள் நின்று ஆடியருள்வன். அச் சத்தி, அதனால் ஆருயிர்களை நடத்தியருள்வள்.

(அ. சி.) இருபதம் - தத்பதம் - துவம்பதம்.

(27)

2743. தத்துவம் ஆடச் சதாசிவந் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் 1கூத்தன்றே.

(ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் திருவருள் திருவுள்ளத் திருநோக்கமாகிய திருவாடலைப் புரிவது உலக நன்மையும் உலகோர் நன்மையும் நின்று நிலவுதற் பொருட்டேயாம். அதனால் அவன் ஆடவே அனைத்தும் ஆடுகின்றன என ஓதியருளினர். அவை வருமாறு மெய்களாகிய தத்துவங்களாடின. அவற்றுள்ளும் சிறந்து ஐந்தீ. நாப்பண் நிற்கும் அருளோனாகிய சதாசிவனும் ஆடினன். சிவனார் திருவுள்ளமாகிய சித்தமும் ஆடிற்று. சிவனருளாகிய சத்தியும் ஆடினள். முன்னேறி ஓங்கி உயருமாறு அமைத்த இயங்குதிணைப் பொருள்கள், நிலைத்திணைப் பொருள்களும் ஆடின. அவற்றினுக்கு உறுதிபயக்கும் மறைகளும் ஆடின என்க. அத்தனாகிய அச் சிவபெருமானும் என்றும் பேரின்பப் பெருங்கூத்தாடினன்.

(28)

2744. இருவருங் 2காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருபர ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தனா னந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

(ப. இ.) பதஞ்சலி முனிவர் புலிக்கால் முனிவர் என்னும் இருபெரும் செம்பொருட்டுணிவினராகிய சிவனடியார்களிருவரும்


1. முத்தணி. 8. திருப்பொற் சுண்ணம், 10.

2. பொருவருந். 12. திருமலைச் சிறப்பு, 31.