1168
 

இடையறாது கலந்திருந்தருள்கின்றனன். எனினும் அழுந்தி அறிவதாகிய அனுபவத்தானன்றி எழுந்து மொழிவதாகிய சொல்லாற் கூறுவதற்கு முன்னிலையாகிய எண்ணத்தான் எண்ணவும் ஆகான். புலப்பு - புலத்தல்; புலவி. துணர் - இணர்; பூங்கொத்து.

(அ. சி.) புலவி - பிணக்கு. இணரும் - இதயத்துள் கலந்திருக்கும். துணர் - கொத்து.

(2)

2814. இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும்
வணங்க வேண்டா வடிவை யறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை 1யொழியுமே.

(ப. இ.) உண்மைச் சிவனுடன்கலந்த திருவடியுணர்வுடையார், 'மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்கும் சிறப்பிலாரா'கிய உலகோருடன் சேரார். அதனால் இனி உலகோருடன் இணங்க வேண்டாவென்று ஓதினர். இது நல்லார் பொல்லாருடன் இணங்கா இயல்பினையொக்கும். நுணங்கிய கல்வியும் நூல்களும் புணர்ந்தார்க்கு என்ன பயனைச் செய்யும். வழி நடப்பார்க்கு வழிகாட்டும் நூலும் பொருளும், வழியும், மொழித் துணையாலும், விழித் துணையாலும், அழிவில் காற்றுணையாலும் கற்றும் கண்டும் நடந்தும் பேரூர் சென்ற பெருமக்களுக்குப் பின் அவை பயன்படாமை இதற்கு ஒப்பாகும். திவருடிக் கலப்பு எய்தியபின் வேறு நில்லாமையின் வேறு நின்ற காலத்துச் செய்து போந்த வணக்கங்கள் இப்பொழுது அந்த முறையில் செய்யவேண்டாவென்க. இஃது ஒருவர் கையினை மற்றொருவர் வேறு நின்றுதொட்டு இரண்டு கையும் கூடிய கூட்டம் பின் கூடவேண்டா என்பதும், பெருவிரலும் ஆட்காட்டி விரலும் ஒன்றாய்ப் புணர்ந்து வேறற நின்றபின் புணரவேண்டா என்பதும் எப்படியோ அப்படியாகும். மேலும் "தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை" (55) என்பதன்கண் சிவபெருமானுக்குரிய எட்டுத் திருவுருவங்களுள் ஆருயிர்த் திருவுரு நீங்கலாகிய ஏனைய ஏழு திருவுருவங்களையும் 'தெய்வம்' என ஓதினர். தெய்வம் ஆகுபெயராகத் தெய்வவுருவினைக் குறிக்கும். அவ்வுருவங்களை வணங்கிக்கடந்தவர் மீண்டும் வணங்கவேண்டாவென்பதும் இதற்கு ஒப்பாகும். இவ்வுண்மைப் பொருளினைத் திண்மையுற உணராது பிணங்குவார் பலர்; பிதற்றுவாரும் பலர். அவரைநோக்கிப் பிணக்கத்தையும் பிதற்றையும் ஒழிமின் என்று ஓதினர்.

(3)

2815. துன்னிநின் றான்தன்னை யுன்னிமுன் னாவிரு
முன்னி யவர்தங் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமன்றே.

(ப. இ.) திருவருளால். உன்னுடன் விட்டுநீங்காது ஒட்டிநிற்கும் சிவபெருமானைக் கனிமனத்தான் நினைந்து அவன் திருவருளை மறவா


1. சாத்திரத்தை. திருக்களிற்றுப்படியார், 6.

" கண்களிரண்டும். 8. திருப்படையாட்சி, 1.