1179
 

மனம் நல்லான் கறவை எனப்படும். அம் மனத்தினை உயிர்ப்புடன் பூட்டுதல் வேண்டும். அங்ஙனம் பூட்டினால் விரிந்து விளைந்து வெண்மையாகக் காணப்படும் உயிர்வித்து வீடுபேற்றின் வித்தாய் அருள் நினைவாய் அடியின்பாய்த் திகழும். வெள்ளரி - வெண்மை.

(அ. சி.) அரிக்கின்ற - தானிய அரிக்கட்டுக்கள் உண்டாதற்கு உரிய. நாற்றங்கால் அல்லற்கழனி - நாற்றங்கால் ஆகிய வயல்போலும் துன்பம் நிறைந்த உடல். திரிக்கின்ற ஓட்டம் - வெளியில் திரியும் நாலு விரல் அளவுள்ள சுவாசம் (இது பன்னிரண்டங்குலமுள்ள சுவாசம் பூரகம் செய்யும்போது எண் விரல்தான் திரும்பி வருகின்றது. நால் விரல் வெளியே நின்றுவிடுகிறது என்பதைக் குறிக்கின்றது.) சிக்கெனக் கட்டி - அந்த நான்கு விரல் அளவு உள்ள சுவாசத்தையும் கூடிக் கொள்ளும்படி செய்து. வரிக்கின்ற - கொள்ளத்தக்க. நல்லான் கறவை - மனம். பூட்டில் - பிராணவாயுவாகிய சுவாசத்துடன் கூட்டினால். வெள்ளரி வித்து - சுக்கிலம். வித்தாமே - முத்திக்கு வித்தாமே.

(12)

2838. இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்
கிடாக்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக்கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
கிடாக்கொண்டு1 செந்நெல் அறுக்கின்ற வாறே.

(ப. இ.) தாளாண்மையை முன்னிட்டுக்கொண்டு தூவுதலாகிய மனத்தைப் பண்படுத்தி, திருவடிநினைப்பாகிய தூய பயிற்சியை எருவாக இட்டு, மேன்மையுணர்வாம் மோனமாகிய விதையினை விதைத்து, முயற்சியாகிய இடையறாத் தொண்டினைக் கிடாவாகப் பூட்டி, திருவடிப் பேரின்பத்தினை வெளிப்படுமாறு கிளறி, மோனத்தினின்றும் தோன்றும் தேனனைய திருவடியுணர்வின்பத்தினை விசுத்தி எனப்படும் மிடற்றின்கண் திருவருள் நினைவாம் மிடாக்கொண்டு அமைத்தல்வேண்டும். அதன்கண் திருவடிப்பேரின்ப அமிழ்தாம் சோற்றினைச் சமைத்துப் 'பப்பற வீட்டிருந்துணர்தலாகிய' மெல்ல விழுங்குதலைச் செய்யார். விளை வறுத்துக்கொண்டுவர வேண்டுவதாய முயற்சியுடன் சென்று விளைவு ஏதும் இன்மையால் அவர் அறுக்கின்றது ஏதும் இன்றென்க.

(அ. சி.) இடர்கொண்டு - வருந்தி முயன்று. தூவி - மனதைப் பண்செய்து. எருவிட்டு - சுத்தவாதனையாகிய எருவினை இட்டு. வித்தி - மோனமாம் வித்தைப் பதித்து. கிடர்க்கொண்டு பூட்டி - முயற்சியினால். கிளறி - வெளிப்படச்செய்து. முளையை மவுனத்தினின்றும் முளைக்கும் ஞானத்தை. மிடர்கொண்டு - விசுத்தி ஆதாரத்திலுள்ள ஈசன் அருளினால். சோறட்டு - அமுதம் வரச்செய்து. அடர்க்கொண்டு - துன்பம் எய்தி. செந்நெல் - சிவானுபவம்.

(13)

2839. விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதே.


(பாடம்) 1. அடர்க்கொண்டு.