(ப. இ.) எண்பாற் புலத்தினும் சிவபெருமானின் திருவடிவமே விளங்கி ஒளிதருவதாயிற்று. முப்பத்தாறாம் மெய்யாம் ஓசையினின்று எழும் சத்தமாகிய எழுத்துக்கள் என்றும் உள்ளன. அதுபோல் விழுமிய முழுமுதல்வனாம் சிவபெருமானும் என்றும் பொன்றா இயல்பினன். தேசம் ஒன்றாகக் கண்டமாகிய பிரிவு ஒன்பது என்ப. யாண்டும் அச் சிவபெருமான் 'உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போற், பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' (8. அதிசயப்பத்து, 9) என்னும் செந்தமிழ் மறைமுடிபினுக்கு ஏற்ப மலர்மணம் போன்று மன்னிநின்றருள்வன். (அ. சி.) ஈசன் . . . . . இயங்கின-எல்லாத் திக்குகளிலும் சிவமே விளங்கின. ஓசையில்.....சத்தம்-நாத தத்துவத்தினின்றும் எழும் அக்கரங்கள் போல. உலப்பிலி - கெடுதல் இல்லாதவன். தேசம்-உலகம். செழுங்கண்டம் ஒன்பதும் - திருமூலர் காலத்தில் இப் பூமி அண்டம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இப்போது 5 கண்டங்களாக இருக்கிறது. (31) 2971. இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் 1றானன்றே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் பழுதில் திருவடியுணர்வு கைவந்த நாயன்மார்பால் அவர்தம் உணர்வுக்கு உணர்வாய் நின்று தன் இயற்கை உண்மையறிவின்ப வடிவினை உணர்த்தியருள்வன். அதனால் அவன் அவர்கட்கு இல்லாதவனும் அல்லன். உணர்வினில் உள்ளவனாகவே என்றும் காணப்படுவன். அத்தகைய தவப்பேறு ஒரு சிறிதும் கிட்டாத அறியாமை மிக்க புல்லறிவினர்க்கு முனைப்பு முன்னிற்கும். அந்நிலையில் கல்லாதார்க்கு வரிவடிவம் புலனாதல் இல்லாமை போன்று அவர்தம் உணர்வுக் காட்சிக்குச் சிவபெருமானும் புலனாகான். அதனால் அவன் அவர்கட்கு உள்ளவனும் அல்லன். அவன் நம் நெஞ்சகத்துக் காணப்படும் 'காராரும் ஆணவக் காட்டைக் களைந்து அறக்கண்டு அகங்கார மென்னும், கல்லைப் பிளந்தருள்வன்' மேலும் அவன் 'கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லானு'மாவன். அம்முறையின் எளியேன் நெஞ்சினை உருகுவித்தருளினன். அதன்மேல் அவனே உணர்வினுக்குணர்வாக வெளிப்படும் காட்சியனுமாவன். காட்சியன்-உணருருவாவோன். அவன் தொன்மையிலேயுள்ள நன்மையன். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய தூயோனும் அவனே. என்றும் ஒன்றுபோல் நிற்கும் திரிபிலாத் தன்மையனும் அவனே. அவனே மாசிலாச் செம்மணி. சொல்லுதற்கரிய அருட்பேரொளி. அவன் நம்மையெல்லாம் அன்றுதொட்டு இன்றுகாறும் தொடர்ந்து நின்றருளும் தடங்கடலந்தணன் ஆவன். (அ. சி.) இல்லனுமல்லன் - ஞானிகளுக்குத் தெரிபவன் ஆனதால் இல்லாதவனுமல்லன். உளனல்லன் - அஞ்ஞானிகட்குத் தெரியாதவன்
1. கல்லா. 8. திருவம்மானை, 5. " ஆட்டுவித்தால். அப்பர், 6. 95 - 3.
|