2976. நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி 1லாரே. (ப. இ.) முழுமுதற் சிவபெருமானின் திருநிறம் மெய்யடியார்கள் எவ்வண்ணம் நினைக்கின்றார்களோ அவ்வண்ணம் காணப்படும். அவன் எல்லாங் கடந்தவன் ஆதலினானும் அவன் எல்லாங் கொள்பவன் ஆதலினாலும் அடியவர் நினைத்தவண்ணத்தை அப்படியே கொண்டருள்கின்றனன். அவன் 'அறவாழி அந்தண'னாதலின் அவன் புரிந்தருளும் அறப்பாங்காம் தலையளியும் பலவாகும். தலையளி - கருணை. மெய்யடியார்களின் தலையன்பு எவ்வண்ணமாக விளங்குகின்றதோ அவ்வண்ணமாகும் அவன் புரிந்தருளும் இன்பம். மேலும் அவன் புரிந்தருளும் மறத்தலையளி நெறியல்லா நெறிச் சென்று வெறியராய், பறிதலையராய், கிறியராய்க் கொடுமை பல செய்து வடுவுடன் மாண்டழிந்த கொடியோர் பாவம் எவ்வண்ணம் அவ் வண்ணமாகும். இவையனைத்தும் வெளிப்படுமாறு உலகிடைப் புறத்தே நூல் வழக்காகவும் உலக வழக்காகவும் காட்டியருள்கின்றனன். அங்ஙனமிருந்தும் நற்றவஞ்சேர் பொறியிலார் போற்றாதகலுகின்றனர். பொறி - புண்ணியம்; நல்லூழ். (அ. சி.) நிறம்பல - சிவத்தின் ஒளி பலவாம். எவ்.....ஈசன் - அன்பரது மனஒளி எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்; "தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசனுக்கே." சேரமான் பெருமாள். அறம்பல-அறக்கருணை பல. எவ்.....இன்பம் - அடியாரது அன்பு எவ்வண்ணமோ அவ்வண்ணம். மறம் பல - மறக்கருணை பல. எவ் . . . . . பாவம் - கொடியரது பாவம் எவ்வண்ணமோ அவ்வண்ணம் புறம்பல காணினும் போற்றகிலார் - இம்மாதிரி உலகில் கண்டாலும் மக்கள் வழிப்படுவதில்லை. (37) 2977. இங்குநின் றானங்கு நின்றனன் எங்குளன் பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு எங்குநின் றான்மழை போலிறை 2தானன்றே. (ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமான் என்றும் எங்கணும் நீக்கமின்றி நின்றருள்கின்றனன். அதனால் அவனை இங்கு நின்றான் அங்கு நின்றான் என்றோ, இவ் வுலகத்துள்ளான் அவ் வுலகத்துள்ளான் என்றோ சுட்டிக்கூற வொண்ணாது. அன்றியும் எங்குளன் என வினவவும்
1. ஞமனென். அப்பர், 5.67 - 18. " பொன் வண்ண. 11. சேரமான், பொன், 1. " ஆவே. நாலடியார், 118. " பஞ்சின். 12. தடுத்தாட்கொண்ட, 159. 2. வானத்தான். 11. காரைக்காலம்மையார், அற்புதம், 6. " சிந்தனைபோய். தாயுமானவர், 43. பராபர - 137.
|