(ப. இ.) மெய்ம்மையினையும் மெய்ப்பொருள் உண்மையினையும் அழித்தொழிக்கும் பழிபடு கள்ளினை யுண்பார் வழி குழி தெரியாது வீழ்ந்து மயங்குவர். தீராப் பெருந்துன்பம் எய்தித் தியங்குதலாகிய கலக்கமுற்றுக் கவலைகூர்வர். மேலும் அவர் பிறப்பு இறப்பு ஆகிய பெருந் துன்பத்துள் வீழ்த்தி இயக்கும் இழிகாமமும் கழிகாமமும் மாறாப் பெண்ணியலாரை நண்ணுவர். அம் மடவார் தரும் சிற்றின்பமே முற்றின்பமாகக் கொண்டு முயங்குவர். இறைவன் திருவடியுணர்வாகிய சிறந்த நயமிக்க சிவஞானஞ்சேர்ந்து முதன்மையடையார். இந் நிலையினால் பிறழா நிகழ்ச்சியாய் என்றும் நிகழும் இடையறா இன்புமாம். திருவடிப்பேற்றினைக் கள்ளுண்பான் எய்தான். எய்துமே : ஏகாரம் எதிர்மறை. முந்தார் முதன்மையடையார். இயங்கும் மடவார்: இயங்கும் பிறவினைப் பொருளில் வந்த தன்வினை; பிறப்பு இறப்புக்களில் உழலச் செய்து இயக்கும் பெண்ணியலார். (7) 318. இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி1 இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே. (ப. இ.) மறப்பும், நினைப்பும், இருளும், ஒளியும், புலம்பும், புணர்ப்பும், பாவமும், புண்ணியமும் இராப்பகல் என்று உருவகிக்கப்படும். இராப்பகல் அற்ற இடம் உள்ளுணர்வாய்த் திகழும் திருவருள் வெளிநிலையம். அவ்விடத்தே மறவா நினைவுடன் இருந்து பிற பொருள்களை எண்ணியுழலும் எண்ணமும் நீங்கத் திருவடிப்பேறாம் பேரின்பத் தேனினை மயக்கும் கள்ளுண்பார் ஒருஞான்றும் பருகார். சிவபெருமான் இரவு பகல் என்று கணிக்கப்படும் கால மெய்யினைக் கடந்தவன். அக் கால மெய்யினையும் நடத்துபவன். அதனால் அவன் கால காலன் எனச் சிறப்பித்து அழைக்கப்படுவன். அதனால் இரவு பகலற்ற இறை என ஓதினர். அவ்விறைவன் திருவடியின்பத்தினை அவன் திருவருளால் புணர்விற் புலம்பு புணர்விற் புணர்வு (சகல கேவலம் சகல சகலம்) என மாயைக்கண் நிகழும் ஈரிடத்தும் உழலும் யான் எய்தினேன். எய்தினேன் என்னும் ஒருசொல் சொல்லெச்சமாக வருவித்து முடிக்க. மெய் - தத்துவம். (அ. சி.) பராக்கு - வேறு ஞாபகம். (8) 319. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானந்2 தன்னில் தலைப்பட்டுச் சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. (ப. இ.) அன்னை மெய்யென்று சொல்லப்படும் சத்தி தத்துவத்திலுள்ள ஓர் ஆவியாற் செய்யப்பட்டது கலப்பிலாச் சத்தி நெறியாகிய 1. ஆலந். ஆரூரர். 7. 61 - 1. " சுழலார். அப்பர், 4. 93 - 6. 2. சத்திதன். சிவஞான சித்தியார், 1. 3 - 2.
|