களைத் தெறுதலில்லை. நிறைந்த நீர் நிழலையடைந்து இன்புறுவார் எவ்வகைச் சூட்டாலும் தெறப்படாமை இதற்கு ஒப்பு. இவ்வருளிப் பாட்டினையே மாயவைத்தான் என ஓதினர். சேரும் வினை என்பது ஆகுபெயராய் எஞ்சு வினையைக் குறித்தது. அங்ஙனம் வைத்தருளிய சிவபெருமானின் திருக்கோவில் ஒன்றுண்டு, ஆருயிர்கட்கு உடம்பினையும் அளித்தருளினன் அம்மட்டோ? அவ்வுயிர்களைத் தனக்கு உடம்பாகவும் கொண்டருளினன். காயம் - உடம்பு. எல்லாவற்றுடனும் நீக்கமறக் கலந்து நின்று அவற்றை இயக்கி அருளுகின்றனன். மேலும் சிவனை நினைந்து பிறப்பற்றுத் திருவடிச் சிறப்புற்று வாழ்தற்கு வழியாகச் சிவனடியார் கூட்டத்தையும் வைத்தருளினன். திருவடியுணர்வு நுகருமாறுந் திருவருள் வைத்தருளினன். சேரும் வினையினை ஏறுவினை என்றலும் ஒன்று. அது தீய வைத்தலின்மையாற் பொருந்தா தென்க. (அ. சி.) சேரும் வினை - ஆகாமியம். ஆர்மின் - ஊழ்வினையைப் புசியுங்கள். மாயம் . . .உண்டு - புருவமத்தி. ஆயம் - சிவம் சத்தி கூட்டம். ஆய் உணர்வு - அறியும் அறிவு. (10)
12. மறைப்பு 417. உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே.1 (ப. இ.) உயிருக்கு உயிராய் உள்ளத்தே நீங்காது நிற்கின்ற ஒப்பில் முழுமுதலாம் சிவபெருமானை உள்ளத்து ஒருவன் என்பர். அவனே உள்ளுறு சோதியாவன். அவன் ஒவ்வொரு உள்ளந்தோறும் ஓரடிச் சிற்றளவேனும் விலகாது நின்றருள்கின்றனன். உள்ளமும் சிவமும் வேறறக் கலந்து உடனாக இருப்பினும் உள்ளமாகிய உயிர் தன் சிற்றறிவினானும் சுட்டறிவினானும் அச் சிவனைக் காணமாட்டாது. முற்றறிவினால் காணுமாயினும் அம் முற்றுணர்வினை அவன் வெளிப்படுத்தியருளுதல் வேண்டும். அவன் வெளிப்படுத்தாமலிருப்பதே மறைப்பருள் என்று கூறப்படும். அந்நிலையில் - அவன் தன்னைக் காட்டாத நிலையில் - ஆருயிர்கள் அவனது உண்மை நிலையினை அறியமாட்டா என்க. உரு - சிவபெருமானின் உண்மை நிலை. (1) 418. இன்பப் பிறவி2 படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்3 என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.
1. விள்ளத்தா. அப்பர், 4. 76 - 7. 2. மானுடப். சிவஞானசித்தியார், 2. 4 - 20. 3. இறைவனிங். " 2. 2 - 11.
|