191
 

(ப. இ.) திருவடியின்பம் பெறுவதற்கு வாயிலாகக் கொடுக்கப்பட்டது மக்கட்பிறவி. அதனால் அப்பிறவி இன்பப் பிறவிஎன ஓதப் பெற்றது. அஃதாவது பேரின்பம் எய்துதற்கு ஏதுவாகிய பிறவி. அத்தகைய பிறவியைத் தண்ணருளால் படைத்துத் தந்த சிவபெருமானும் துன்பத்தை மிகுவிக்கும் பாசத் தொடர்ச்சினையும் அடைத்தருளினன். இதுவே 'மால் கொடுத்து ஆவி வைத்தார்' என்பதன் வாய்மையாகும். இவ்வுடம்பு என்புகளைப் பொருத்தி, தசைகளை இசைத்து, வலிமையுடைய நரம்புகளாற் பிணித்துத் தோலால் மூடி முடித்தமைத்த தொன்றாகும்.

(2)

419. இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை1
மறையவன்2 வைத்த பரிசறி யாதே.

(ப. இ.) துடைத்தலைச் செய்யும் இறையவனாகிய அரனும், காத்தலைச் செய்யும் மாதவனாகிய அரியும், படைத்தலைச் செய்யும் மறை ஓதுபவனாகிய அயனும் முழுமுதற் சிவபெருமான் படைத்தளித்தருளிய சிறந்தபொறிகளமைந்த உடம்பின்கண் வந்து கூடினர். அங்ஙனம் கூடுமாறு அவர்கள் செய்தவத்துக் கீடாக அமைத்தருளியவன் சிவபெருமான். அவன் அவ்வாறு உடற்கண் பொருத்தியருளிய திருவுள்ளக் குறிப்பினை இம் முத்தேவரும் அறியார். அச் சிவன் கடைசிவரியிற் காணப்பெறும் மறையவன் என்பது வினைப்பயனை நுகர்வித்தற் பொருட்டுத் தன்னை மறைத்து வைக்கும் திருவருளினையுடையோன் என்பது பொருள். முத்தேவரும் மறைப்பினுட்படுவர் ஆதலின் அவர்களும் சிவனை அறியார் இரும்பொறியாக்கை - மாயாவியந்திரதனு. சிவபெருமானை நோக்கிப் பெருந்தவத்தைச் செய்து காத்தற்றொழிலைப் பெற்றனன் மாயன். அதனால் அவன் மாதவன் என்று அழைக்கப்பட்டனன்.

(அ. சி.) இறையவன் - உருத்திரன். மாதவன் - மால். இன்பம் படைத்த மறையவன் - அயன்.

(3)

420. காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்டெண் அலியுரு வாய்நின்ற ஆதியை3
ஊன்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே.

(ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கள் தன்னைக் கண்டு காதல் செய்யும் பொருட்டுக் கண்ணொளியை அளித்தருளினன். தானும் ஆண் பெண் அலி என்னும் திருவுருவங் கொண்டருளினன். அலி என்பது ஈண்டு அருவுருவத் திருமேனி. அவன் ஆதியாகிய அம்மையையுடைய


1. உளதில. சிவஞானபோதம், 3.

2. மோகமிக. சிவப்பிரகாசம், 14.

" அயன்றனை. சிவஞானசித்தியார், 1. 3 - 1.

" கந்தமல. சிவப்பிரகாசம், 5.

3. ஆணாகிப். அப்பர், 6. 18 - 12.