என்ப. இவற்றை முறையே ஆன்மதத்துவம் வித்தியாதத்துவம் எனவும் கூறுப. அங்கு இரண்டெட்டுப் பதினாறு, மூன்றைந்து பதினைந்து ஆக முப்பத்தொன்று கூறிய குறிப்பினால் உணரலாம். (அ. சி.) கோசம் - பஞ்சகோசம். இரண்டெட்டு மூன்றைந்து - முப்பத்தொரு தத்துவங்கள். (14) 450. பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும் பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. (ப. இ.) பிண்டமாகிய உடம்பினகத்து ஐம்பொறிகளினூடே புலப்படும் பொருளை ஏற்றுக் கொள்ளும் புலன்கள் ஐந்து. அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பன. இவற்றைப் புலன் எனவும் தன்மாத்திரை எனவும் கூறுப. இப்புலன்கள் முறையே செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் பொறிகளை இடமாகக்கொண்டு திகழும் மெல்லிய நரம்புகள் என்ப. இப்புலனைந்தும் அறிவுடையனபோல காணப்படினும் உண்மையானோக்கு வார்க்கு அவை அறிவில்லன என்பது புலனாகும். அதனால் ஈண்டுப் பேதைப்புலன், என்று ஓதப்பெற்றது. இப் புலன்கள் உடம்பினுள் தோன்றி உணருந் தன்மையை உடையவாயின. மரித்தல்: எண்ணுதல் ; உணர்தல். இது மருவுதல் என்னும் அடியாகத் தோன்றியதாகும். இச்சொல் வடமொழியில் ஃச்மரித்தல் என்றாயிற்று. கருப்பை முட்டையாகிய அண்டத்தினுள் அருளால் பொருந்திய ஆருயிரும், ஆங்கு உயிர்ப்பாகிய நாதத்தினோடு விரும்பிப் பொருந்தியிருக்கும். (அ. சி.) பேதைப்புலன் - அறிவற்ற புலன். (15) 451. இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன் துலைப்பொறி யிற்கரு ஐந்துடன் ஆட்டி நிலைப்பொறி முப்பது1 நீர்மை கொளுவி உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே. (ப. இ.) சிவபெருமான் எனக்களித்த உடலும் அதன்கண் காணப்படும் பொறிகளும் நிலையுடையனவல்ல. இலைஎன்பது இல்லை என்பதன் நடுக்குறை. அச்சொல் அவாய் நிலையான் நிலையுதல் என்னும் சொல்லைப்பெற்று நிலையுதல் இல்லை என்று ஆயிற்று. தூண்டித் தொழிற்படுத்தும் துணைப்பொறியாம் உணர்த்துமெய் ஐந்தென்ப. அவற்றுடன் ஆருயிர்களை இணைத்து வினைக்கீடாக ஆட்டுபவன் சிவன். நிலைப் பொறியாகவுள்ள மெய்கள் முப்பது. தனித்தனித் தன்மைவாய்ந்த அம் முப்பது மெய்களையும் உடற்கண் இணைத்தருளினன். உலைதலையுடைய உடலகத்துக் காணும் பொறிகளும் உலைதலையுடையன உடலகத்து இல்லிகளாகிய ஓட்டைகள் ஒன்பதுள்ளன. இல்லி என்பது கடைக்குறைந்து இல்லென நின்றது. இவ்வளவு தன்மையோடுங் கூடிய உடம்பொன்றைப் படைத்தருளினன். உணர்த்து
1. சுத்ததத் சிவஞானசித்தியார், 2. 3 - 19.
|