214
 

உந்தி - கொப்பூழ்; ஈண்டு, அடி வயிறு. தால்வளை - அண்ணத்தின் கண்ணதாம் தொளை. பகலவன் - கதிரவன்.

(33)

469. உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.

(ப. இ.) தாய் வயிற்றில் தக்க தவப் பேற்றால் தோன்றிய மக்கட் கரு பத்துத் திங்கள் நிறைந்ததும் திருவருளால் நிலவுலகத்துத் தோன்றும். தோன்றி 'ஈன்று புறந்தருதல்' தாயின் தலையாய கடனாதலின் அம் மகவும் தாயால் வளர்க்கப்பெறும். வளருங் காலத்து இருட் சார்பாம் மருளின் மயக்கத்தினாலே தன் உண்மையறியாது வளரும். அவ்வாறு வளரும் தன்மையினை அறிவார் யார்? மாயை - இருட்சார்பாம் மருள். அருவம் - கட்புலனாகாமை; அறியாமை.

(34)

470. இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன்இம் மாயையின் கீழ்மையெவ் வாறே.1

(ப. இ.) காதலால் மருவித் தம்வயம் இழந்து இன்புற்றார் இருவருள் வித்தாகிய விந்துவினை இட்ட தலைவனும் பிள்ளை பிறக்கும் அல்லது பிறக்கும் வாய்ப்பில்லாது போகும் என்றும் உணரான். ஒரு வேளை பிறந்தாலும் அஃது ஆணா பெண்ணா என்று அறியும் அறிவும் உண்டாகாது. அதுபோல் அவ்வித்தினை ஏற்ற தலைவியும் ஏதும் அறிந்திலள். தட்டான் ஆகிய சிவபெருமான் அறிந்திருந்தும் ஒருவருக்கும் உணர்த்தான் தட்டான்: காரணத்தின்றும் காரியப்பாட்டினை ஆக்கியருள்வோன்; மனம் வாக்குக்கு எட்டாதவன்; மாற்றம் மனங்கழிய நின்ற மறையோன். பட்டாங்காகிய உண்மை உணர்த்தும் முழுமுதற் சிவனும் உயிருக்கு உயிராய் ஆங்கு உள்ளான். அந்நிலையில் அம் மாயையானது ஆவியின் அறிவினைக் கீழ்ப்படுத்திப் பிறப்பு இறப்புக்களில் உழலச் செய்கின்றது. இத்தகைய தாழ்நிலையை அம் மாயை எவ்வாறு செய்கின்றது என்று நினைக்க நினைக்க மிக்க வியப்பினைத் தருவதாகின்றது.

(அ. சி.) இட்டார் - தந்தை. ஏற்றவர் - தாயார். தட்டான் - சிவன்.

(35)

471. இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே.

(ப. இ.) காதலரிருவரும் இன்பம் எய்தும்படி விரும்பி மருவிக் கூடுவர். அங்ஙனம் கூடிய கூட்டத்தில் கருவுண்டாகும். அக் கருவி


1. கைக. 12. திருமலைச் சிறப்பு 24.