476. விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத் தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.1 (ப. இ.) இத் திருப்பாட்டு ஒருமலமுடையார் நால்வகையினர், இருமலமுடையார் மூவகையினர், மும்மலமுடையார் மூவகையினர் ஆகப் பதின்மரென ஓதுகின்றது. ஒரு மலமுடையார் - விஞ்ஞானாகலர். இருமல முடையார் - பிரளயாகலர். மும்மலமுடையார் - சகலர். (2) 477. விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. (ப. இ.) கேவலத்து ஆராதுவிட்டவர்: மும்மலத்து அழுந்தாத ஆட்டும் முதன்மை மலமட்டுமுடையவர். (முதன்மை - அதிகாரம்.) தஞ்ஞானர் - முழுச் செவ்வி வாயாதவர். அவர் ஆவியருளோன் எனப் பெயர் பெறுவர். (ஆவியருளோன் : அணுசதாசிவர்.) இவர்கள் அருளோன் மெய்க்கண் உறைவர். (அருளோன் மெய் : சதாசிவ தத்துவம்.) அட்டவித்தேசர் - அறிவுக்கடவுளர் எண்மர். இவ்வெண்மரும் ஆண்டான் மெய்யின்கண் உறைபவர். (ஆண்டான் மெய்: மகேசுர தத்துவம்.) எஞ்ஞான... நாயகர் - எண்மை ஞானத்தராய செவ்வியர் ஏழுகோடி மந்திரத் தலைவராவர். இவர்கள் ஆசான் மெய்யின்கண் உறைபவர். இம் மூவரும் முழுச் செவ்வி வாயாதவர். (ஆசான்மெய் - சுத்த வித்தியா தத்துவம்) மெய்ஞ்ஞானர் - முழுச் செவ்வி வாய்ந்தவர்; ஆட்டு முதன்மை மலமுமில்லாதவர். ஆணவம் விட்டு - மலப்பசையற்று. நின்றார் - சிவபெருமான் திருவடியிற் கலந்து பிரிவற நின்று பேறுபெற்றார். இந்நால்வரும் அறிவிற்சீலம், அறிவின் நோன்பு, அறிவிற் செறிவு, அறிவின் அறிவு என்னும் நானெறிப் பேற்றினராவர். (இந் நான்கும் ஞானத்திற் சரியை முதலனவாகக் கூறப்படும்.) இவர்களை ஒருமலமுடையார் எனக் கூறுவது மலப்பசையறாமை பற்றி என்க. (மலப்பசை - மலவாசனை.) (3) 478. இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவ துள்ளே இருமல பெத்தர் இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர் முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.2 (ப. இ.) முன் திருப்பாட்டில் ஓதப்பட்ட முழுச் செவ்வி வாயாத ஒரு மலமுடைய மூவகையினரும், மற்றோர் படைப்புக்குப்பின் அத்தனாகிய சிவபெருமான் திருவடிக்கீழ் வீடுபேறு எய்துவர். இரண்டா... பெத்தர் - இரண்டாவது வகையினராகிய இருமலமுடையார் இருவகையினராவர். அவர் நிறைசெவ்வியும் குறைசெவ்வியும் உடையார் என இரு வகைப்படுவர். இவருள் நிறைசெவ்வியுடையாரும் விழுப்
1. உரைதருமிப். சிவஞானசித்தியார், 8. 1 - 1. 2. தானமியா. சிவஞானசித்தியார், 8. 2 - 15.
|