(அ. சி.) ஆறதுவாகும் அமிர்தத் தலையினுள் - அமுத ஆறு பெருகும் தலையினுள். ஆறது...அருவழி - அமுதம் பெருகும் வழிகள் 1305. வளர்ப்பதிரண்டே - விருத்தியாக்குவது சத்தியும் சிவமும். (56) 676. இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த் திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே. (ப. இ.) நெருப்பு மண்டிலம் பகலோன் மண்டிலம் என்னும் இரண்டிற்கும் மேலதாய் விளங்கும் சதாசிவநாயகி என்னும் வேந்துத் தலைவி. இரண்...சொல்லில் - இடதுமூச்சு வலதுமூச்சு என்னும் உயிர்ப்பு நிறைந்து நிற்கும் நாடிகளை ஆய்ந்து சொல்லுங்கால். இரண்...டொன்றாய் - இரண்டான்வரும் உயிர்ப்பு முதன்மையான ஆயிரத்து ஐம்பத்தொன்றாம் நாடிகளில், திரண்டது - நிறைந்து செறிந்தது. கால்...அஞ்சே - கால அளவையைக் கொள்ளத்தக்கது ஐம்பூதத் தொடர் பால் ஐவகைப்பட்ட (677) உயிர்ப்பென்னும் பிராணவாயுவேயாம். (57) 677. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது அஞ்சது வன்றி இரண்டது வாயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. (ப. இ.) புலம்பத்தாகலின் திருவருளாற்றலுக்கும் முகம் பத்தாயிற்று; அத்தகைய பத்துத் திருமுகங்களையுடைய அம்மை முதல்வியாவள். புலம் - திசை. அஞ்சுதலுடன் கூடிய திருமுகம் ஐந்தென்றலும் ஆம். அஞ்சுடன் அஞ்சது - பத்துக் காற்றுக்கள். ஆயுதமாவது - அப்பத்துக் காற்றுக்களும் படைக்கருவிகளாகும். அஞ்சது வன்றி - தும்மல், விழி, கொட்டாவி, இமை, வீங்கற்காற்றுக்கள் ஐந்தும் நீங்கிய உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று ஆகிய உயிர்ப்பு, ஐந்தனுள், இரண்டது - இடப்பால் வலப்பால் உயிர்ப்பு இரண்டு; ஆயிர...மொன்றே - ஐயாயிர ஆண்டுகள் பயின்று நடுநாடியின்கண் அடக்கியுள்ள உயிர்ப்பு ஒன்றேயாம். (58) 678. ஒன்றது வாகிய தத்துவ நாயகி ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில் ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்றது காலம் எடுத்துளு முன்னே.1 (ப. இ.) திருவருளாற்றல் நடுநாடி உயிர்ப்பினைக்கொண்டு செலுத்தும் வகையினைச் சொன்னால், ஊர்வகை - உடனாய்நின்று நடத்தும் முறை ஒன்றது...முன்னே - அளவிடப்படாத காலங்களுக்குமுன் நடத்தும் என்பதைக் கருதுவாயாக. ஊர்வகை: ஆருயிர்களுடன் பேருயிர் உடனாய் நின்று செலுத்தும் புணர்ப்புப் பண்பு மூன்றனுள் ஒன்றாகும். இதுவே 'இவர் தந்தூர்தல்'. (59)
1. அவர்தந்தார். திருக்குறள், 1182.
|