335
 

துன்பம் தந்து காய்வர். அங்ஙனம் சினந்தாலும் சினக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை நன்மைப்படுத்தி நல்லருள்புரிவர். தீவினையாளர்களைத் துன்பப்படுத்துவதில் தீயினும் கொடியராவர்.

(13)

792. தீவினை யாளர்1தஞ் சென்னியி னுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர் மதியிலுள் ளானே.2

(ப. இ.) பூவினையாளராகிய சீலநெறியினர்க்கு அவர் வாழும் திருவாரூராய்ப் பொலிவர். தீவினையாளராகிய நோன்பு நெறியினர்க்கு அவர் வழிபடும் அருவுருவாய்த் திகழ்வர். மாவினையாளராகிய செறிவு நெறியினர்க்கு அவர்தம் மதிமண்டிலத் தமிழ்தாய் மன்னுவர். பாவினையாகிய அறிவு நெறியினர்க்கு அவர்தம் பாவிளங்கும் உணர்வுக்கு உணர்வாய் உறைந்து உவகையூட்டுவர். பாவினை - திருப்பாட்டாகிய கீதத் தொண்டு. இம்முறைமை 'பத்தராய்ப் பணிவார்கள்' என்னும் திருப்பாட்டானுணர்க.

(அ. சி.) தீவினையாளர் - சிவாக்கினி வளர்த்துப் பூசனை புரிபவர். பூவினையாளர் - பூவால் பூசனை புரிபவர். பாவினையாளர் - தோத்திரப் பாக்களால் பூசனை புரிபவர். மாவினையாளர் - யோக முயற்சியுடையவர்.

(14)

793. மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

(ப. இ.) அகத்தவத்தோர் உடம்பகத்துத் திங்களினிடத்து எழுங்கலைக் கதிர்கள் பதினாறாகும். அதுபோல் பதினாறு இதழ்களுள்ள மிடற் (விசுத்தி)றிடம் மனையொக்கும். மூலம், கொப்பூழ், மேல் வயிறு, நெஞ்சம் வரையிலுள்ள ஞாயிறு தீ இவற்றின் கதிர்கள் இருநூற்று இருபத்துநான்காகும். இவை ஊரொக்கும். புருவநடுவில் காணப்படும் அருள்கதிர்கள் அளவில். அவற்றைப் பரப்பி ஆவி மயங்காவண்ணம் ஆண்டவன் இருந்தனன். அதனால் ஆவியும் மயங்காதிருந்தது. கதிமனை - மேல் வீடு. கணைகள்: உவமையாகுபெயராய் அருட்கதிர்களைக் குறிக்கும்.

(அ. சி.) மதி...பதினாறாய் - சந்திரகலை பதினாறுபோல 16 இதழ்களுள்ள விசுத்தி. நூறு நூற்றிருபத்து நாலாய் - மூலாதாரம் முதல் அனாகதம் வரை ஒளிபரப்பும் கிரணங்கள் 224.

(15)

794. இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.


1. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 1.

2. விளக்கினார். அப்பர், 4. 77. 3.

" கீதத்தை சம்பந்தர், 2. 43 - 5.