336
 

(ப. இ.) சத்தியும் கன்னியும் ஆகிய திருவருள் அருட்கதிர்கள் சூழ மிடற்றின் நடுவாக இருந்தனள். மான்போலும் விழிகளும் மதி போலுந் திருமுகமும் உள்ள திருவருள் அருளமுதம் பொழிந்து இருந்தனள். விசுத்தி - மிடறு. அக்கலை - அந்த அருட்கதிர்கள்.

(அ. சி.) அந் நடு - விசுத்தியின் நடு. மானேர்முக நிலவார - மான் நேர் முகம் நிலவு ஆர என்று பிரிக்க.

(16)

795. பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே.

(ப. இ.) (திருவருளால்) சொரியப்பட்டு விளங்கும் வெண்ணிறமான அமிழ்து, பொன்நிறமான மண்போல் தாங்கும் மூலத்திடத்தில் சேரின், அங்குப் பெருகிவழிந்து உடம்பெங்கும் நிறைந்திருந்து உறுதிதரும். வான் முதலாகிய ஐம்பூதக் கூட்டுறவாலாகிய உடம்பில் கழிவு ஏற்பாடாது. அப்படிக் காக்க வல்லார்க்கு உடம்பு கொழுந்துபோல் என்றும் பொலிவுடன் இருக்கும். இதுவே கைக்கொள்ளத் தகுந்த உயர்ந்த பண்பாகும்.

(அ. சி.) பொழிந்து அவிரும் வெள்ளி - சத்தியால் சொரியப்படும் அமுதம். பொன்மண் - பூதலம்; மூலாதாரம். வான்முதல் - ஆகாயம் முதலிய பூதங்கள்.

(17)

796. குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.

(ப. இ.) பசுங்கொடிபோலும் இறைவி இறைவனுடன் கலத்தலாகிய மணம் எய்தி ஆவியகத்திருந்தால், இறைவனும் அத் திருவருளுடன்கூடி ஆவிக்குப் பேரின்பப் பெருஞ்செல்வம் நல்கியருள எழுந்தள்ருவன். வல்லி - இறைவி. மணம் - கலப்பு. தனம் - பேரின்பச் செல்வம். தத்துவ ஞானம் - இறைவி.

(அ. சி.) மணமதுவாக - ஈசனுடன் கூடி.

(18)

797. இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.

(ப. இ.) மூலத்திடத்து இருந்த உயிர்ப்பு (பிராணன்) நடுநாடியினுள் மேலெழும். அப்படி எழுந்து அண்டமாகிய ஆயிர இதழ்த் தாமரை என்னும் பரவெளியில் செல்ல நோக்கும். அங்ஙனம் செலுத்திப்