அவனருளால் உணரின் ஒளி வீசுகின்ற திருவடியாகிய மாமணியினுள் நிலைத்திருத்தலுமாகும். (அ. சி.) எறிமணி - ஒளியில் பத்துவித நாதத்தின். (7) 986. இருளும் வெளியும்போல் இரண்டாம் இதய மருளறி யாமையும் மன்னு மறிவு மருளிவை விட்டெறி யாமை மயங்கு மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.1 (ப. இ.) வெளியும் இருளும்போல் நெஞ்சமும் மயக்கந் தருவதாய அறியாமையும் உயிரிற் கலந்திருக்கும். ஆருயிரின் அறிவு அறியாமையை விட்டொழிக்கும் ஆற்றலுடையதன்று. அதனால் மயங்கும். திருவருள் துணையால் அறியாமையை அகற்றியவர் சிவ வழிபாட்டினராவர். (அ. சி.) இருளும் வெளி - இருளொடு கூடிய ஆகாயம். எறியாமை - நீங்காமை. (8) 987. தானவ னாக அவனேதா னாயிட2 ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவ னன்பிது நாலா மரபுறத் தானவ னாகுமோ 3ராசித்த தேவரே. (ப. இ.) ஆருயிர்கள் கட்டுநிலையில் முனைத்துநிற்கும். அப்பொழுது உடனாய் நிற்கும் இறைவன் அவ்வுயிரின் வழி நிற்பன். ஆதலால் உயிர் அவனாகவே நிற்கின்றது. வீட்டுநிலையாகிய ஒட்டுநிலையில் திருவருள் முனைத்துநிற்கும்; அப்பொழுது உயிர் ஆண்டவன் வழிநிற்கும். அந்நிலையில் அவனே - ஆண்டவனே உயிரைத் தன்னுள்ளடக்கித் தானாக நிற்பன். ஆண்டவன் அவ்வுயிராகவே நிற்கு நிலை இஃதென்ப. இவ்விரு நிலையிலும் சிற்றறிவாகிய உயிர் சிவமாக விளங்கும் ஒட்டுநிலையே உயர்ந்ததாகும். அங்ஙனம் உயிர் சிவமாவதற்குப் பேரன்பாகிய காதல் வேண்டும். அக் காதலின் பயனாக எய்துவது தானாதல் என்று சொல்லப்பெறும் சாயுச்சியமாம். நெறிநான்கால் எய்தும் பயன் நான்கென்பர். அவை சிவனுலகிருத்தல். சிவன் அண்மையிலிருத்தல். சிவனுருப் பெறுதல். சிவனாதல் என்ப. தான் எனினும் சிவன் எனினும் ஒன்றே அந்நிலையருளும் சிவனைப் பேரொளிப்பிழம்பென்னுந் தகைமை பற்றி ஆதித்த தேவர் என்பர். ஆதித்த தேவர் - சிவசூரியர். (அ. சி.) அறிவன் - சிவன். நாலாம் மரபு - சாயுச்சியம். (9) 988. ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும் பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.
1. நாமல்ல. சிவஞானபோதம், 12. 2 - 1. 2. அவனே. சிவஞானபோதம், 10. 3. (பாடம்) ராதித்த
|