1000 .இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக நடங்கொண்ட பாதங்கள் 1நண்ணீ ரதற்குச் சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே. (ப. இ.) அனற்குண்டத்தை இடமாகக்கொண்ட அழகிய திருவடிச் சுடர் ஒப்பில்லாத என்றும் மாறாத திருக்கூத்தியற்றும் தன்மையதாகும். அத் திருவடிகளே அவ்வனலுக்கு உயிர்த் தன்மையாகும். உலகெலாம் விளங்கும் பன்னிரண்டு கலைகளும் நாளும் பெருக, திருமுகம் கொண்டருளிய செஞ்சுடர் முக்கணப்பராகும். (அ. சி.) கை - கலை. இரண்டு ஆறு - பன்னிரண்டு. செஞ்சுடர் - சூரியன். (10) 1001 .முக்கணன் றானே முழுச்சுட ராயவன் அக்கணன் றானே அகிலமும் உண்டவன் திக்கண னாகித் திகையெட்டுங் கண்டவன் எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.2 (ப. இ.) இயற்கைப் பேர்அன்பு அறிவு ஆற்றல்களுடைய சிவன் முக்கண்ணன் என்று அழைக்கப்படுவான். முக்கண் திங்கள் ஞாயிறு, தீ. திங்கள் என்பது அன்பாகிய இடக்கண். ஞாயிறென்பது ஆற்றலாகிய வலக்கண். தீ என்பது அறிவாகிய நெற்றிக்கண். அம் முக்கண்ணன் எப்பொருட்கும் அந்தத்தைச் செய்பவன், அதனால் அகிலமும் உண்டவன் எனப்படுவன். அவனே எட்டுத்திசைகளிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன். இஃது 'எண்தோள் முக்கண் எம்மானே' என்னும் திருமுறையான் உணரலாம். உலகோர் கண்ணன் என்று எவனைக் கூறுகின்றனரோ அவனுக்கும் இறைவனாவன். அவனே எந்தை என்க. தான் : அசை. (அ. சி.) அகிலமும் உண்டவன் - பெரு ஊழியில் உலகங்களை எல்லாம் தன்னிடம் ஒடுக்கிக்கொண்டவன். திக்கண...கண்டவன் - எட்டுத் திசைகளிலும் வியாபித்தவன். எக்கணன்றானுக்கு - திருமாலுக்கு. (11) 1002 .எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகந் தோன்றலாற் கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.3 (ப. இ.) எம் தந்தையாகிய கடவுளுக்குச் சுடரே திருவுரு. அவ்வுரு ஆறுவட்டமாகத் திகழ்ந்து நின்றது, அவ் வட்டத்தினின்றும் அறுமுகக் கடவுள் தோன்றினன். அவனைக் கந்தக் கடவுள் என்றும் வழங்குவர். கந்தக் கடவுளும் சிவபெருமானும் பிரிப்பின்றிக் கலந்து விளங்கு
1. (பாடம்) நன்னீ. 2. அவனவள். சிவஞானபோதம், 1.
3. ஆறுகொ. அப்பர், 4. 18-6.
|