466
 

அதன் முன்னிலையாகிய கண்டத்தில் வெளித்தள்ளும் மிடற்றோ (மத்திமை)சையாக நிற்கும். அதன் முன்னிலையாகிய நினைவு (பைசந்தி) ஓசை திங்கள் நிலவொத்து இருக்கும். இதற்கு முன்னிலையாகிய நுண்ணோசை ஒன்று உண்டெனினும் இவைபோல் ஒப்பில்வைத்துக் கூறமுடியாமையால் இதுவே ஈறென்றனர்.

(34)

1165. ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிர
மாறுதல் இன்றி மனோவச மாயெழில்
தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

(ப. இ.) முடிந்த முடிவாகிய திருவருளம்மை முதல்வியாவள். அவளிருக்கை பதினாறாயிரம் இதழ்களையுடையதாய் மாறுதலில்லாமல் அன்பர் மனத்தடங்குவதாய் அழகிய மதிமண்டலத் தாமரையாகும். இதுவே சிறந்த நறுமணம் கமழும் விந்துவாகும். இதனால் உயிர்கட்குப் பேறருளிக் காட்சிப் புலனாம் உருவுடனும் தோன்றியிருந்தனள் என்பது புலனாம்.

(35)

1166. இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.1

(ப. இ.) திருவருளம்மை முடிவாக மதிமண்டலத்திருந்தனள். எல்லா வுலகங்களிலும் அவரவர் வினைக்கீடாகப் பிறந்து வாழும் உயிர்கள் முயன்று வழிபட்டுச் செந்நெறி முறைப்படி ஒழுகிப் பேரின்பமெய்தி வாழ மங்கை நல்லாளும் எழுந்தருளியிருந்தனள். மங்கைநல்லாள் - திருவருளம்மை.

(34)

1167. மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளுங் குமாரர்கள் ஐவருந்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே2

(ப. இ.) மங்கையாகிய திருவருளும் மாரனாகிய சிவனும் ஒப்ப நின்று தம்மிற்கூடி உள்ளும்புறமும் உற்றுநோக்கினர். அதனால் அருளோன், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் ஐவரும் முறையே தோன்றினர். இவ்வைவரும் முறையே அருளல், மறைத்தல், துடைத்தல், காத்தல், படைத்தல் என்னும் ஐந்துதொழில்களையும் அருளாணை பெற்றுப் புரிவாராயினர். சத்தியும் சிவனும் அங்குலியாகிய மகத் (மூலப்பகுதி) தத்துவத்தைச் சீகண்ட முனைவன் வாயிலாகத் தொழிற்படுத்துவர். அப்பொழுது கொங்கை நல்லாளாகிய எழுச்சிமெய் தோன்றும். அதிலிருந்தும் குமரர்கள் ஐவர்களாகிய பூமுதல் (நுண்மை) ஐந்தும்


1. கல்லாதார். அப்பர், 6. 84 - 8.

2. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார்,

2. 4 - 2.