524
 

கத்தூரி (3) சாந்து (4) சவ்வாது (5) புழுகு (6) நெய் (7) கற்பூரம் (8) கோரோசன நீர் (9)

(50)

1344. வைத்திடும் பொன்னுடன் மாதவ நோக்கிடிற்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை யாயிரம் ஆயிரஞ் சிந்தியே.

(ப. இ.) பெருந்தவப்பேற்றால் பொன்தகட்டில் வரைந்த சக்கரத்தின்கண் விளங்கும் அழகிய கொங்கையுடைய கன்னியம்மையைக் கவர்ச்சியுறச் செய்யும் இம் மந்திரத்தை ஆயிரமுறை உருவேற்றினால் ஆயிரம் அருச்சனையாகும். ஆயிரமுறை உருவேற்றுக. கை - அழகு. ஆயிரம் ஆயிரம்: அடுக்கு அளவின்மை குறித்து நின்றது.

(அ. சி.) வைத்திடும் பொன்னுடன் - சக்கரத்தின்கண் தாபிக்கப்பட்டிருக்கும் பொன்மயமாகிய நவாக்கரி சத்தியுடன். கை - அழகிய. தச்சு - வசியம்.

(51)

1345. சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு
முந்தை கிலீமெழ முன்னிருந் தாளே.

(ப. இ.) அன்பர் உள்ளத்தின்கண் அளவிறந்த இயற்கைப் பேரொளியாய் விளங்கும் அம்மை தந்தையாகவும் தோற்றமருள்வள். அத் தோற்றத்தின்கண் திருக்கைகள் ஆறினிலும், மழு, சூலம், தோட்டி, கயிறு, வில், அம்பு என்னும் ஆறு கருவிகள் காணப்படும். இவைகள் கிலீம் என்னும் வித்தெழுத்தில் தோன்றுவன. அவ் வித்தெழுத்தைச் சேர்த்தொலிக்க அம்மை முன்னிற்பள். பந்தம் - தீப்பந்தம்; மழு. படை - தோட்டி.. கைகள் ஆறு ஓதுவதால் திருமுகங்கள் மூன்று கொள்ளப்படும்.

(அ. சி.) எந்தை - தந்தைபோலும் அன்புள்ள. பந்தம் - மழு, கிலீம் - பீச எழுத்து.

(52)

1346. இருந்தனர் சத்திகள் அறுபத்து நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மா
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.

(ப. இ.) திருவருளம்மையின் விரிந்த ஆற்றல்களாவார் அறுபத்து நால்வர். மதிக்கத் தகுந்த எண்வகை ஆற்றலரும் உளர். இவர்கள் அனைவர்களும் நவாக்கரி சக்கரத்தின் சூழவும் திருமுன்பும் இருப்போராவர். திருவருளம்மையின் இரண்டு திருக்கையிலும் வில்லும் அம்பும் காணப்பெறும்.

(அ. சி.) எண் வகை - மதிக்கத்தகுந்த.

(53)


1. பூவ. அப்பர். 5. 65 - 1.

" போற்றிசைத்துன். அப்பர், 6. 57 - 10.