543
 

மாகிய மெய்க்கூட்டங்களை அடக்குதலாகிய செம்மை நிலையினை எய்துவர்; இவர்களே தத்துவங் கடந்த நிறைபெரும் பொருளைச் சேர்ந்தோராவர். இவர்கள் பேரறிவுப் பிழம்பாம் பெரும் பொருட் சிவனை உணர்ந்து உணர்ந்து ஒப்பிலா இன்பமுறும் ஒண்மையராவர். நேயத்தர் - உணரப்படும் பொருளை உணர்ந்தடைந்தவர்.

(அ. சி.) வேதாந்தம்...சித்தாந்தம் - சுத்த சைவ சித்தாந்தமே வேதங்களின் முடிவு. பூதாந்தம் - பூதங்களின் முடிவு. போதாந்தம் - ஞான முடிவு. புனம் செய்ய - ஐம்புலக் காட்டினைப் பண்படுத்த.

(4)


2. அசுத்த சைவம்
(மீஇயற்கைச் செந்நெறி)

1398. இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்து
இணையார் இணைக்குழை யீரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றாது
அணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே.1

(ப. இ.) தமக்குத் தாமே ஒப்பாகிய நூலுணர்வு நுகர்வுணர்வுகளாகிய இரண்டு திருவடிகளையும் தொழுந் தன்மையருடம்பு சிறப்புடம்பாகும். அவர்கட்கு இரண்டு குண்டலங்கள் காதணியாகக் காணப் பெறும் திருநீறும், திருவைந்தெழுத்தும், அறிவடையாள அங்கையும், நற்பண்பு வாய்ந்த தலையினும் மார்பினுமாகிய இரண்டு சிவமணி மாலைகளும் குறையாது என்றும் பொருந்துவனவாகும். இத்தகையோர் சீலத்தர் நோன்பினர் என்றழைக்கப் பெறுவர். சீரங்கம் - சிறப்புடம்பு.

(அ. சி.) சீரங்கம் - சிறப்புற்ற சரீரம். ஈரணை முத்திரை - விபூதி அணிந்து அஞ்செழுத்தைச் செபித்துச் சின்முத்திரையுடன். குணமார் - நற்குணத்தைக் கொடுக்கின்ற. இணை - இணைத்த. கண்டமாலை - உருத்திராக்க மாலை. குன்றாது - தவறாது.

(1)

1399. காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்து
ஓதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.2

(ப. இ.) பொன்னாலாகிய இரண்டு காதணியும், சிவமணி வடமாகிய உட்கட்டிரண்டும் உடையராய் வழியாறினையும் ஆசானருளால் உண்மை காண்டலாகிய தூய்மை செய்து. ஐந்தெழுத்தருமறை கோடலாகிய உபதேசம்பெற்று அதனை இடையறாது ஓதியிருப்பர். அவர் ஒப்பில்லாத சிறந்த சைவராவர். உபதேசத்தைப் பெற்றவர் மெய்கண்டார் என்று அழைக்கப் பெறுவர்.


1. பிறப்பொக்கும். திருக்குறள், 972.

2. தோலும். 8. திருக்கோத்தும்பி, 18.