556
 

(ப. இ.) எவர்க்கும் முழுமுதலாய் வேண்டுவார் வேண்டுருவுடன் தோன்றுபவராய் உள்ள சிவபெருமானின் தாயாய் விளங்குபவள் திருவருளம்மை. அத் திருவருளம்மையின் ஒலிக்கும் சிலம்பணிந்த திருவடியிணையினைப் போற்றித் தொழுங்கள். தொழுதால் அத் திருவருளம்மை மெய்யுணர்வு நல்கும் வித்தாய் உங்கள் நடுவே எழுந்தருள்வள். அவள் எழுந்தருள்வதால் பெருமைமிக்க ஆனேற்றின்மீது வரும் சிவபெருமானின் பேரின்பப் பெருவளம் மிக்கு உண்டாகும். அச் சிவபெருமான் வானுலகப் பசுக்களாகிய தேவர்களால் என்றும் தொழப்படும் சிறப்பினன். கோன் தலைவன்; முதல்வன். நக்கன் - தோன்றுபவன். ஞானக்கன்று - மெய்யுணர்வு நல்கும் வித்து. மான - பெருமையையுடைய. கன்று - ஆனேறு; இடபம். நகுதல் - தோன்றுதல்..

(அ. சி.) கோன் நக்கன் தாய் - இறைவன் தாய்; தேவி. ஞான..... தரும் - ஞானம் உண்டாகும். வானக்கன்று ஆகிய வானவர் - வானத்தின்கண் உள்ள உலகங்களில் வசிக்கும் பசுக்களாகிய வானவர் (பசுக்கள் - மும்மலங்களையுடையவர்) ஆனக்கு - ஆனால். அன்று ஈசன் அருள்வளமாமே - அப்பொழுது ஈசன் அருட் செல்வ முண்டாம்.

(3)

1427. இதுபணிந் தெண்டிசை மண்டலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

(ப. இ.) மேல் ஓதிய முறைமைகளை வணங்கி ஏற்றுக்கொண்டு, எட்டுத் திசைகளால் சூழப்பெறும். உலகு உடல் பொருள்கள் நிறை மண்டலங்களையெல்லாம் படைத்து அளித்து அழித்து மறைத்தருள் செய்யும் ஐந்தொழிலுடைய அம்மையை ஒரு கூற்றிலே உடையவன் சிவன். மாந்தர் செய்யத்தகுந்த இறைபணி சிவப்பணியேயாம். இச் சிவப்பணியே நோன்பாளராகிய கிரியையினர் செய்யும் சிவபத்தித் திருப்பணியாகும்.

(அ. சி.) இது பணிந்து - இவ்வுரையை நம்பி. இது பணி - ஆக்கி அளிக்கும் தொழில்.

(4)

1428. பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.1

(ப. இ.) சிவபத்தன் ஆனவன் திருமுறையில் கூறியபடி சீலம் நோன்பு இரண்டினையும் சிறப்பாகச் செய்துவர இயற்கைத் திருவருள் மேலும் துணைசெய்யும். அத் துணையால் குற்றம் நீங்கம். குற்றம் நீங்கலும் யோகத்தில் செலுத்தும். யோகம் - செறிவு. இச் செறிவால் அறியும் எண்ணமாகிய சித்தம் குருவருளால் சிவமாய்த் திகழும்.

(5)


1. பாலைநெய்தல். திருக்களிற்றுப்படியார், 12.

" புத்திரமார்க். சிவஞான சித்தியார், 8. 2 - 10.

" பெருமை 12. சண்டேசர், 37.