562
 

இதுவே சிவோகம். பின் திருவருள் முயற்சியினால் தானாகவே சிவன் திருவடியின்பினைத தலைக்கூடுவன். மருந்துவனைச் சார்ந்த நோயாளிக்கு நேரும் முயற்சியெல்லாம் மருந்துவனாலேயாம் என்பது இதற்கு ஒப்பாகும்.

(அ. சி.) சிவோகம் - அவனே தானே ஆகிய நெறி. பின்பால் - சிவோகம் பாவனை கைவந்த பின். நேயம் - சிவம்.

(3)

1443. இருக்குஞ் செருமி இடம்பிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

(ப. இ.) மாறுபாடில்லாத சிவஞானத்தைத் திருவருளால் தெளிந்துணர்ந்தோர் சிவஞானியராவர். அவர் ஒடுக்கமாகிய நிட்டை கூடியிருக்குமிடம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடமாகும். இயங்குதிணை நிலைத்திணையாகிய கூட்டமனைத்தும் அவர்கட்கு உலக உறவாகும். மேம்பாடு மிக்க ஒழுக்கமனைத்தும் தாமே வந்து எய்தும்.

(அ. சி.) செருமி இருக்கும் - மறைந்து இருக்கும். ஆசாரம் - ஒழுக்கம். திருக்கிலா - மாறுபாடில்லாத.

(4)

1444. அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே.

(ப. இ.) சிவத்தை அறியும் அறிவும், சிவத்தில் அடங்கும் அடக்கமும், சிவத்தைப் பற்றும் தலையன்பும் உள்ளவர்கேடில்லாத சிவவுலகத்தில் வாழ்வோராவர். அவர்கள்தம் புற அடையாளச் சிவக்கோலமும், அக அடையாளச் சிவப்பண்பும் ஒலிக்கும் கழலணிந்துள்ள சிவபெருமான் திருவடியிணையினை நீங்கா நிலைமையினைக் குறிப்பனவாகும். அவர்கள் பால் அடங்கி நிற்கும் திருவடியுணர்வு காற்று முதலிய துணையால் நீரில் ஒலியுண்டாவதுபோல் செந்நெறிச் செல்லும் துணையால் வெளிப்படும்.

(அ. சி.) பிறியா நகர் - முத்தி நகர். நீர்த்தொனி - நீரினிடத்து உள்ள ஒலி காற்று முதலிய கூட்டுறவால் வெளிப்படுவதுபோல, அறிவால் ஆன்மாவில் அடங்கியுள்ள ஞானம் பிரகாசிக்கும்.

(5)

1445. ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதொறுங்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊன மறுத்துநின் றொண்சுட ராகுமே.1

(ப. இ.) திருவடியுணர்வாகிய சிவஞானமே முறுகிநிற்கும் நல்லார் திருவுள்ளத்துள் மூலாதாரம் உயிர்ப்பு முதலிய அகத்துவத்துக்கு


1. அண்டமா. அப்பர், 5. 97 - 2.