(ப. இ.) சிவனாம் நிலையில் முதனிலை சைவம் சிவனுடன் தொடர்புற்று நிற்றல். இரண்டாம்நிலை அந் நெறியின் உண்மை உணர்ந்து சிவன் அண்மையில் சார்ந்துநிற்றல். மூன்றாம்நிலை சார்ந்துநிற்றலைக் கடந்து முழுநீறு பூசிய முனிவர்போன்று வேறன்மையாக விரவி நிற்றல். இந்நிலையே சைவத்தின்கண் ஓதப்படும் சிவனார் திருவடிப் பேரின்பம் என்னும் சாயுச்சியமாகும். 'தோல்மறைந்து வெண்ணீறு தோன்றல் பொருள் வேறன்மைச். சால்புணர்ப்புச் சாற்றுந் தனித்து. (அ. சி.) சாராமல் நீவுதல் - சார்ந்து நில்லாமல் இரண்டறக் கலத்தல். (1) 1487. சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல் சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதல் சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் சாயுச் சியமனத் தானந்த சத்தியே. (ப. இ.) சிவனாம் பெருநிலையாகிய சாயுச்சியம் சார்தல் மேலாலவத்தையில் நனவில் உயிர்ப்படங்குதல் வேண்டுதல் வேண்டாமை இல்லாமையாகிய உவர்ப்புநிலை உலகங் கடந்தநிலை இந் நிலை உபசாந்தநிலை என்றும் கூறப்படும். இதுவே சிவனாம் பெருநிலையில் தங்குதல். இவ்வுவர்ப்பு நிலை. 'காட்டல் வெறுப்புப்புக் காட்டாமை ஆம் விரும்பிங், கூட்டல் உவர்ப்பாம் உணர்' என்பதனான் உணரலாம் ஊட்டல் - ஒப்பக் காண்டல். சிவமாம் பெருவாழ்வே எய்துதல் முடிவிலாச் சாயுச்சியம். இதன்கண் சிவபெருமானது திருவருட் பேரின்பமாகவே திகழ்தல். இவ் விழுப்பேறு யான், எனது, ஆண், அறிவு, என்னும் இருமாத்திரைச் சொற்பொருளாய் ஆயிருர் நிற்குங்காறும் பெறுதல் இயலாது. ஆனால் பெண், அன்பு என்னும் ஒரு மாத்திரைச் சொற்பொருளாயவழி எய்துதல் இயையும். இயையவே விழுமிய முழுமுதற் சிவபெருமானும் கண், இன்பு என ஒரு மாத்திரைச் சொற்பொருளாய் விளங்கியருள்வன்.1 (அ. சி.) உபசாந்தம் - விருப்பு வெறுப்பு இல்லாமை. (2)
17. சத்திநிபாதம் (திருவருள் வீழ்ச்சி) மந்ததரம் (மிகுமட்டம்) 1488. இருட்டறை மூலை யிருந்த குமரி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி யவனை மணம்புரிந் தாளே.2 (ப. இ.) அறியாமையாகிய இருள் சூழ்ந்த இவ் வுடலகத்து அறியாமையை நீக்கி அறிவை விளக்கும் திருவருட்குமரி மூலையிலிருப்பார்
1. சாத்தி. அப்பர். 5. 60 - 3. 2. மூலை. திருவுந்தியார், 12.
|