581
 

போன்று மறைந்துறைந்தனள். அறிவுக்கண் விளங்காது குருடாக இருந்த ஆருயிர்க்கிழவனைக் கூடுதல் கருதி அவனுக்கு ஏற்பட்ட குருடாகிய அறியாமையை அகற்றிச் சிவபெருமானின் எண்குணங்களையும் வண்ணமுறக் காட்டித் தன்மாட்டே பேரன்பு கொள்ளுமாறு மயக்கி அவன்பால் சிவமணம் கமழும்படி தான் கூடியிருந்தனள்.

(அ. சி.) இருட்டறை - அஞ்ஞான இருள் படர்ந்த சரீரம். குமரி திருவருட் சத்தி. குருட்டுக் கிழவன் - ஞானக்கண்ணில்லாத ஆன்மா, அஃதாவது அஞ்ஞானமுள்ள சீவன். குருட்டினை - அஞ்ஞானத்தை மருட்டி - தெளிவு உண்டாக்கி. மணம் புரிந்தாள் - தங்கினாள்.

(1)

1489. தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல னாயறி வார்க்கமு தாய்நிற்குந்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய சொல்லையு மாமே.1

(ப. இ.) சிவனடியின்பம் எய்துதற்குரிய நிலையினை எண்ணில் அந்நிலை திருவடியுணர்வாய் அவ் வுணர்வினை உணர்வார்க்கு இறவா இன்ப நுகர்வாம் சிவ அமிழ்தாய் நிற்கும். இத்தகைய இனிய உணர்வாகித் தெளிவறியுடையவர்கட்குக் கோப்புலனாகிய சிவஞானம் எண்ணியவாறே ஐம்புலனுகர்வின்பம் தரும் புறத்துப் பூங்காவொத்து அகத்துத் திகழும். கோப்புலன். கோம்புலன் என எதுகைநோக்கித் திரிந்தது. கோப்புலன் - உயர்ந்த ஞானம். கொல்லை - பூங்கா.

(அ. சி.) தீம்புலன் - இன்பம் அனுபவிக்கும். தசை - சமயம். ஆம் புலனாய் - பொருந்திய அறிவாய். கோம்புலன் - சிவஞானம்.

(2)

1490. இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே யாதி யருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.2

(ப. இ.) பழமலமாம் இருளைப் பிறைமதிபோல் நீக்கி, அதன் பொருட்டு அவ் வுயிர்க்கு நேர்ந்த பல பிறவிகளையும் கொடுத்துக் கடத்தி ஆதியாகிய நடப்பாற்றல் திருவருள் நீங்காவண்ணம் உடனின்றருளும் அருளவே அவ் வுயிர் உன்மத்தம் அகலாத வானவர் கோனாகிய சிவபெருமானுடன் கூடி என்றும் நிலைத்திருப்பதாகிய பேரின்பம் நுகரும். உயிர்நிலைக்களமாம் உடம்பாகவும் அவ் வருள் திகழும். புலம்பயல் : பயில்புலம் - உறையும் உடம்பு.

(3)

1491. இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.


1. மாசில். அப்பர். 5. 90 - 1.

2. மன்னும். சிவஞானபோதம். 11. 2 - 2.

" முழுவதுங். 8. திருச்சதகம். 7.