676
 

மீண்டும் தன்பால் ஒடுக்குதலால் அந்தமாகவும் விளங்குகின்றனன். மேலும் ஆருயிரின் உடம்பகத்துத் திருவருள் நிலையாம் திங்களுமாகும்.

(20)

1720. தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடுந்
தன்மேனி தானுஞ் சதாசிவ மாய்நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்
தன்மேனி தானாகுந் தற்பரந் தானே.1

(ப. இ.) ஆருயிர்களின் உடம்புகள் சிவலிங்கமாகவே நின்றிடும். அதுபோல் அச் சிவலிங்கத்து உள்ளும் புறமுமாய் நிறைந்து நிற்கும் சதாசிவமுமாகும். உடம்பே தனிமுதற்சிவன். உடம்பே சிவன் திருவடிப் பேரின்பம். உடம்பே சிவமெய்யாகும். உடம்பே ஒப்பில் முழுமுதல். இத் திருமந்திரம் ஆருயிரின் இடையறாச் சிவனினைப்பால் அவ் வுடம்பு, உள்ளம், உணர்வு, உணர்விலுளதாம் இன்பம் எல்லாம் சிவனேயாகும் என்பதை வலியுறுத்துகின்றது.

(அ. சி.) மானிட உடல் சதாசிவ உருவமான சிவலிங்க உருவமாகும் என்றது இம் மந்திரம்.

(21)

1721. ஆரும் அறியார் அகார மவனென்று
பாரு முகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டுந் தரணி முழுதுமாய்
மாறி யெழுந்திடும் ஓசைய தாமே.

(ப. இ.) தவத்தால் அருள் கைவரப்பெறாதார் எவரும் அகர எழுத்துப்போன்று சிவபெருமான் ஒன்றாய் வேறாய் உடனாய் நின்று இயக்கும் மெய்ப்புணர்ப்பினை உணரார். ஆருயிரின்பொருட்டு உடல் உலகு உண்பொருள்களாக விரிந்த மாயைக்கு நிலைக்களமாக நிற்பது திருவருளாற்றல். அஃது உகரமாகும். தாரம் என்பது எல்லா வுலகினையும் தாங்கும் ஓமொழியாகும். அதன்கண் விரவிநிற்பது அகரம், உகரம், மகரம் என்பன. இவற்றுள் அகர வுகரம் விரிவாகும். மகரம் ஒடுக்கமாகும். எனவே எழுந்திடும் ஓசை அகர உகரம் என்ப.

(அ. சி.) தாரம் இரண்டும் - பிரணவ உறுப்புக்களாகிய அகாரம், உகாரம் இரண்டும்.

(22)

1772. இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்ட நிறையு மகாரம்
இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறைவிந்து நாதமே.2

(ப. இ.) சிவலிங்கத்தின் அடிப்பகுதியாகிய பீடம் ஓங்கார வடிவமாகும். அப் பீடத்தினுள் மறைந்திருக்கும் சிவலிங்கத்தின் நடுப்பகுதி கண்டம் எனப்படும். சிவலிங்கத்தினுடன் பொருந்தியிருக்கும் வட்ட


1. செங்கண். 12. சண்டேசுரர், 55.

2. எண்ணில. சிவஞானபோதம், 4. 1 - 4.