வரம்பை மீறாமலிருப்பதற்கு அமைக்கப்பட்ட அறிவுக்கோட்டை என்க. நீவி - கடந்து. (அ. சி.) மும்மத வேழம் - இந்திரியம். பிழைத்தன - தவறு செய்தன. மண்டி - நிறைந்து. குலைக்கின்ற - அறிவை அழிக்கின்ற. (4) 1997. ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. (ப. இ.) ஐம்புலன்களும் திருவைந்தெழுத்து எண்ணும் சிறந்த தவத்தினால் ஒடுங்குதலாகிய நல்வழிப்பட்டால் விரிந்த இவ் வுலகம் சிவவுலகமாய்ச் சீர்சால் இன்பம் பயக்கும். மேலும் அந்நிலையே 'சிவத்தைப்பேணில் தவத்திற் கழகு' என்னும் நற்றவமும் ஆகும். அதுவே அரனார் திருவடிப்பேறுமாகும். அந்நிலை மெய்யாக எய்தினவர்களே எய்யாத் திருவருளுடையாராவர். எய்யாத் திரு - குறையாத செல்வம். (5) 1998. பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம் பெருக்கிற் பெருக்குஞ் சுருக்கிற் சுருக்கும் அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் 1வார்க்கே. (ப. இ.) மிகுதியாகப் பன்னிப்பன்னிப் பேசி ஆகும் பயன் என்! கானல்நீர் போல் தோன்றி மாயும் உலகம் எனக் கட்டுரைத்தும் ஆவதென்? மாயாகாரியமாக விரித்தமைத்த சுட்டுப் பொருள்களுக்கு எல்லாம் துணைக்காரணமாக நிற்பது உளளமேயாம். உள்ளம் காரியப் பாட்டினைப் பெருக்கி விரியுமேயானால் பெருகுவதாகும். அம் மனமானது அக் காரியப்பாடுகளைச் சுருக்கிச் சுருங்குமேயானால் அவையும் சுருங்கும். எனவே மனத்தை அடக்கிச் சிவவழிபாட்டிற் செலுத்தி வாழ்வதே உண்மைப் பொருளாகும். இவ் வுண்மையினைத் திருவருளால் ஆய்ந்துகொள்வார் அதனை நன்குணர்ந்தாராவர். (அ. சி.) பேய்த்தேர் - கானல். அருத்தம் - பொருள். அத்தனை - அவ்வளவு. (6) 1999. இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த கிளைக்கொன்று மீசனைக் கேடில் புகழோன் தளைக்கொன்ற நாகமஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே. (ப. இ.) ஆரூயிர்களின் புலம்புநிலையில் - அவ் வுயிர்கள் மலப்பிணிப்பால் வாடிவதங்குவதாகிய இளைப்பினை எய்துவவாயின.
1. உறவுடலை; வேண்டிய நாள், தாயுமானவர், 29. மண்டலத்தின். 9, 10. " பேய்த்தேர் நீர், சிவஞானபோதம், 7. 2 - 1.
|