812
 

(அ. சி.) உலகாணி - உலகுக்கு உறுதி. நிலவாணி ஐந்து - ஐம்பூதம். சிவவாணி - கலந்துநிற்கும். தலைவாணி - தன்னிடத்து வாழ்பவனாக.

(14)

2043. தானந்த மாமென நின்ற தனிச்சுடர்
ஊனந்த மாயுல காய்நின்ற வொண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்ப நீயொழி
கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.

(ப. இ.) பேரொடுக்கப் பேரறிவுண்மை இன்பப் பெரும் பொருள் ஓரொப்பில்லாச் சிவபெருமான்; ஆதலின், அவனே எல்லாவற்றிற்கும் அந்தமாகிய தனிமுதற் சுடராவன். இதுபற்றியே மெய்கண்டாரும் அந்தம் ஆதியென்றருளினர். உலக முதலாக உடம்பிறுதியாக நின்ற ஒண்மை வண்மைச்சுடரும் அவனே. நிலையுதலிலாத தேன்போலும் இனிமை வாய்ந்த உலகியற் சிற்றின்பத்தினை நீ விடுவாயாக. விழுமிய முழுமுதற் பெரும்பொருள் சிவபெருமான். அவனது முடிவுபேறில்லாத திருவருள் திருவடிப்பெரும்பேறு. இது நிலையுள்ள இன்பமாகும். அப்பேறு கைகூடும். கைகூடும் என்பது சொல்லெச்சம்.

(அ. சி.) தானந்தம் - எல்லாவற்றிற்கும் தானே முடிவிடமாம். ஊனந்தமாய் - உடல் இறுதியாய். தேனந்தமாய் - தேன்போலும் இனிமையாய். கோனந்தமில்லாக் குணத்து - சிவனது எல்லையற்ற கருணையினால்.

(15)

2044. உன்முத லாகிய வூனுயிர் உண்டெனுங்
கன்முத லீசன் கருத்தறி வாரில்லை
நன்முத லேறிய நாம மறநின்றால்
தன்முத லாகிய தத்துவ மாமே.

(ப. இ.) ஆருயிர் உறையும் உடலின்கண் காணப்படும் நினைத்தற் கருவியாகிய மனம் இயங்குதற்கு வினைமுதற்காரணன் அரன் ஆவன். அவனே மலைகளுக்கெல்லாம் முதன்மைவாய்ந்த திரு வெள்ளிமலைச் செல்வனாவன். இவ் வுண்மைக் கருத்தினை அறிவார் பலரிலர். பிறப்புக்கு வித்தாகிய காமம் வெகுளி மயக்கமாகிய மூன்றன்நாமமும் அறு நன்னெறி நான்மையின் நிற்றல் வேண்டும். நின்றால் அவை அறும். அவை அற்றால், தனக்கு முதலாகிய மெய்ப்பொருளாம் சிவனை எய்துதல் கூடும். எய்தினால் அந்தமில பேரின்பம் வந்துறும். தத்துவம் - மெய்ப்பொருள். நான்மை : சீலம், நோன்பு, செறிவு, அறிவு.

(அ. சி.) உன்முதல் - மனம் இயங்குதற்கு மூலம். கன்முதல் - கயிலை. நன்முதல் - பிறப்பீனும் வித்து (காமம் வெகுளி முதலியன.)

(16)

2045. இந்தியம் அந்தக் கரண மிவையுயிர்
வந்தன சூக்க வுடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனு
முந்துள மன்னும் ஆறாறு1 முடிவிலே.

(ப. இ.) பூத முதலாகிய தன்மாத்திரை ஐந்தும், மனம் எழுச்சி இறுப்பு ஆகிய அகப்புறக் கலன் மூன்றும் கூடி எட்டாகும். இவ்


1. நித்தமாய். சிவஞானசித்தியார், 2. 3 - 33.