815
 

செல்வராய் இன்முகத்துடன் வீற்றிருந்தருளினன். அவ்வடிவே புண்ணிய வடிவம். அவன் உரைத்தருளிய நூலே மெய்கண்ட நூன்முதல். அதுவே முப்பொருளுண்மை செப்புந் தமிழ் நூற் கரு. அம் மெய்ப்பொருளுண்மையினை மெய்கண்டார் வழிநின்று திருவருட்கண்ணால் உணராதவர் புன்னெறிச் சென்று போதுபோக்கும் தீதால் பழிமொழியாளராவர். இத்தகையோர் மனம்போனவாறே நினைத்தற்கும் சொல்லற்கும் செய்தற்கும் உடன்பட்டு நிற்கும் மடமையராவர். முன்னாள் மெய்ப்பொருள் முதல்வன் பாற்கேட்ட வழிவழி நால்வராவர் : நந்தி, சனற்குமரன், சத்தியஞான தரிசனிகள், பரஞ்சோதி மாமுனிவர் என்ப.

(அ. சி.) நால்வர் - சனகன் முதலிய நால்வர். பரந்தன்மை - மேலான ஞானத்தை. உரம் - உறுதி.

(4)

2050. நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றும்எம் மீசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி யுலக மதுவிது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறன்றே.

(ப. இ.) 'ஒன்றா வுலகத்து உயர்ந்த புகழல்லால், பொன்றாது நிற்பது' பிறிதொன்றில்லையாதலின் நின்ற புகழும் என்று ஓதப் பெற்றது அத்தகைய நிலைநின்ற புகழும், சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று ஓதப்பெறும் நற்றவத்துண்மையும் எந்நாளும் எம்மை ஆண்டருளும் பெருஞ் செல்வனாகிய சிவபெருமானுக்குரிமை பூண்டு ஒழுகும் மெய்யடியார்கட்கே நற்பயனளித்து நீங்காது நண்ணுவதாகும். அதுவல்லாமல் இவ் வுலகத்தில் அயலோர் கூட்டரவால் மருளுற்றுச் செத்துச் செத்துப் பிறக்கும் உயிரினங்களை அது தெய்வம் இது தெய்வம் என்றும், இடி மின்னல் காற்று மழை தீ முதலிய அறிவில் பொருள்களையும் அவ்வாறே அது தெய்வம் இது தெய்வம் என்றும் அறிவுக் குறைவால் கூறுவார் பலர். அவர் அக் குற்றத்தாலும் அறியாமைச் செறிவாலும் பின்னும் குறைபட்டாராவர். குறைபடுதல், தாழ்ந்த பிறப்பினராதல். அவ் வுண்மை தக்கனுக்கு ஆட்டுத்தலை1 யமைந்தமை நன்குணர்த்தும்.

(அ. சி.) குன்றுகை - குறைதல்.

(5)

2051. இன்பத்து ளேபிறந் தின்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்ற 2திதுமறந்
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறை3யென்
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

(ப. இ.) பிறவாப் பெருநெறி எய்துதற்குச் சிவபெருமான் மக்கட் பிறப்பினை வகுத்தளித்தருளினன். அவ்வுயர்ந்த பிறப்பினை எய்த ஆருயிர்கள் மீட்டும் அப் பிறப்பிறப்பில் புகாது அந்த வுடம்பு தன்னுடனே அரனார்


1. எச்சன். அப்பர், 6. 96 - 6.

" தாயினும். அப்பர், 5. 100 - 8.

2. நன்று நாள்தொறு. அப்பர், 5. 42 - 1.

" துன்பம் தும்மைத். " 4. 21 - 9.

3. தம்மையே. ஆரூரர், 7. 34 - 1.